மருத்துவ குறிப்பு

மாணவர்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும் பகல் நேர குட்டித் தூக்கம்

எமது பிரதேசத்தில் மாணவர்களுக்கு போதுமான ஓய்வோ அல்லது அவர்களின் ஏனைய செயற்பாடுகளுக்கான நேரமோ ஒதுக்கப்படாமல் அவர்களை முழு நேரக் கல்விச் செயற்பாடுகளுக்காக மட்டும் நிர்பந்திக்கப்படும் நிலமை உருவாகியுள்ளது. இது அவர்களின் கற்றலையும் ஆளுமை வளர்ச்சியையும், அவர்களின் எதிர்கால ஆற்றலையும் எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. மாணவர்களுக்கு ஓய்வும் பகல் நேர குட்டித்தூக்கமும் எவ்வளவு தூரம் கற்றல் செயற்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் எனப் பல ஆய்வுகள் உலகளாவிய ரீதியில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. வளர்ந்தவர்களுக்கும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும் மதிய நேர ஓய்வும் குட்டித்தூக்கமும் மூளைத்திறன் விழிப்புணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. மழலைகளிலும் இவ் ஆராய்ச்சி நாடாத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
மூன்று வயது முதல் ஐந்து வரையிலான மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போடவைத்தால் அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

மதியச் சாப்பாட்டிற்குப் பிறகான இப்படியான தூக்கம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள் மதியம் ஒரு மணி நேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் தங்களின் மழலைப் பருவ பாடங்களை நன்றாக நினைவில் வைத்திருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கின்றது.

இயற்கை விஞ்ஞானத்துக்கான தேசியக்கழகத்தின் விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின் முடிவுகள் 40 சிறார்களிடம் “மேச்சசூசெட்ஸ் ஹம்ஹாஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் எட்டப்படிருக்கிறது.

இப்படி மதியம் தூங்கி எழுந்த குழந்தைகளின் மூளைத்திறன் மேம்பாடு மதியம் தூங்கி எழுந்த பின்னர் அதிகரிப்பதுடன் மறுநாளும் இது நீடிப்பதாகவும் இவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

குழந்தைகளின் நினைவாற்றலை ஸ்திரப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கும் ஆரம்பகால கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம் அவசியமாகிறது என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து.

மதிய உணவிற்கு பின் தூங்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் தூங்கி எழுந்ததும் காலையில் கண்களால் பார்த்து அதன் மூலம் கற்றவற்றை நினைவு கூர்வதில் சிறப்பாகச் செயற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் இதே குழந்தைகளை மதிய நேரம் தூங்க விடாத போது அவர்களின் கற்றல் திறன் குறைவதைக் கண்டறிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு வயதாக இந்த மதிய நேர தூக்கம் என்பது இயற்கையிலேயே இல்லாமல் போகும் என்றும், மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை மதிய நேரத்தில் தூங்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்Teach

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button