பெண்கள் மருத்துவம்

முப்பது பிளஸ்சில் முக்கியம்!

மகளிர் மட்டும்

ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் ஆணென்ன? பெண்ணென்ன? நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்கிற உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆனாலும், வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்கிற பெண்கள், தங்களது ஆரோக்கியத்தைக் கோட்டை விடுகிறார்கள்.

“வருமுன் காப்போம் என பெண்களைத் தாக்கும் பல பயங்கர நோய்களை சரியான நேரத்துப் பரிசோதனை மற்றும் சிகிச்சையால் தடுக்க முடியும். 30 பிளஸ்சில் அடியெடுத்து வைத்த எல்லா பெண்களுக்கும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் அவசியம்…” என்கிற மருத்துவர் நிவேதிதா, அதைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.

“மாஸ்டர் செக்கப்பில் முதலில் பொதுவான உடல்நலம் பரிசோதிக்கப் படும். அடுத்து நுரையீரல், இதயம், மார்பகங்கள், கர்ப்பப்பை போன்றவற்றின் செயல்பாடு எப்படியிருக்கிறது, ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா எனப் பார்க்கப்படும். மார்பகங்களின் ஆரோக்கியத்தைத் தெரிந்து கொள்ள உதவும் மேமோகிராமும், கர்ப்பப்பைக்கான பாப் ஸ்மியர் சோதனையும் மிகவும் முக்கியம்.

கர்ப்பப்பை, கல்லீரலுக்கான ஸ்கேன், நுரையீரலுக்கு எக்ஸ்ரே, இதயத்துக்கு இசிஜி போன்றவை செய்யப்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, கொலஸ்ட்ரால், யூரியா அளவு, சர்க்கரை போன்றவற்றைத் தெரிந்து கொள்ள ரத்தப் பரிசோதனையும் இதில் அடக்கம். நீரிழிவோ, ரத்த அழுத்தமோ உள்ளவர்களுக்கு எக்கோவும், டிரெட்மில் டெஸ்ட்டும் கூடச் செய்வார்கள்.
27
சிலவிதமான பயங்கர நோய்களை இந்தச் சோதனைகளின் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு கர்ப்பப்பையின் வாயிலுள்ள செல்கள் தானாக வெளியே வரும். அதை எடுத்து சோதித்துப் பார்த்தால், புற்றுநோய் வருவதற்கு முன்பான கட்டத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

40 முதல் 45 வயதுப் பெண்களுக்கும், மெனோபாஸ் வந்த பெண்களுக்கும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படுகிற எலும்பு மிருதுவாகும் நோய் தாக்கும் அபாயம் அதிகம். எலும்புகளின் அடர்த்தி குறைந்து, கால்சியம் இருப்பு குறைந்து, தேய்மானம் உண்டாகலாம். எலும்புகளின் அடர்த்தியை ‘போன் டென்சிட்டோ மீட்டர்’ என்ற கருவியின் மூலம் கண்டுபிடிக்கலாம்.

தேவைப்படுவோருக்கு கால்சியம் மருந்து, மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அதன் மூலம் எலும்புகளை பலப்படுத்தலாம். கால் வலி, முதுகு வலி, மூட்டு வலி போன்றவற்றையும், லேசான அசைவுகளிலேயே எலும்புகள் உடைந்து போவதையும் இதன் மூலம் முன்கூட்டியே தவிர்க்கலாம்.

50 வயதைக் கடந்தவர்களுக்கு கர்ப்பப்பை வாய் பரிசோதனை மிக முக்கியம். கர்ப்பப்பையின் உள்ளிருந்து ரத்தக் கசிவும், வெள்ளைத் திரவக் கசிவும் இருக்கலாம். ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்க முடியாத ஒருவித புண்ணான இதை, ‘ஹிஸட்டெரோஸ்கோபி’ என்கிற எண்டோஸ்கோபி மூலம் கண்டறியலாம்.

திருமணத்துக்கு முன்பு மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு சில பெண்களுக்கு அதிகமாக இருக்கலாம். நிறைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக இருப்பதில்லை. இவர்களும் தைராய்டு டெஸ்ட், கர்ப்பப்பை ஸ்கேன், ஹார்மோன் டெஸ்ட் போன்றவற்றை செய்து நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button