தினமும் உங்கள் ச‌ருமதை பாதுகாக்கும் ஒரு சில வழி முறைகள்

இதோ உங்களுக்கான குறிப்புகள்,

உங்கள் முகத்தை கழுவி சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்:

தினமும் அடிக்கடி முகத்தை கழுவுவதால் முகத்தை பளிச்சென்று வைத்துக் கொள்ள முடியும். மேலும் மாசுக்கள் மற்றும் புகையிலிருந்து உங்கள் முகத்தை பாதுகாத்து கொள்ளலாம். முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவுங்கள், இதனால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கலாம். முகத்தை சுத்தப்படுத்தும் பொருட்களை உபயோகப்படுத்துங்கள். அவை உங்கள் முகத்திற்கு ஏற்றாதாக இருப்பது நலம்.
ச‌ன்ஸ்கிரீன் லோஸன் பயன்படுதுங்கள்:

வெளியில் வெப்பம் அதிகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது சூரியனீடமிருந்து பாதுக்காக்க உதவும் ச‌ன்ஸ்கிரீன் லோஸனை மறக்காமல் பயன்படுத்துங்கள். அது உங்கள் ச‌ருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க‌ உதவும்.
மாய்ஸரைசர் பயன்படுதுங்கள்:

முகத்தை ஈரப்பதமாக வைப்பததால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள் மேலும் உங்கள் முகம் மிருதுவாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கும், எனவே இன்றிலிருந்தே உங்கள் முகத்தை ஈரப்ப‌தமாக வைத்துக்கொள்ளத் தொடங்குகள். வாரத்தில் ஒரு முறை ஈரப்பதமாக வைத்திருக்கும் மாஸ்க்கை பயன்படுதுங்கள்.

Leave a Reply