தலைமுடி சிகிச்சை

நாட்டு சர்க்கரையினால் உங்கள் தலைமுடி மற்றும் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ் !!

உங்கள் கூந்தலை பாதுகாக்கவும், பொடுகு உதிர்தல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் நிறைய ஷாம்பு எண்ணெய் என்று உபயோகித்து எதுவும் சரிபடாமல் சோர்ந்து போயிருக்கிறீர்களா?

அப்படியெனில் இந்த டிப்ஸ் உங்களுக்கு நிச்சயம் உபயோகமானதாக இருக்கும். நாட்டுச் சர்க்கரை வலுவிழந்த கூந்தலுக்கு பலம் தருகிறதோடு மட்டுமல்லாமல், அடர்த்தியையும் அதிகரிக்கச் செய்யும்.

நாட்டுச் சர்க்கரை ஓட்ஸ் ஸ்க்ரப் : இது தலைமுடிகளின் வேர்க்கால்களில் சேர்ந்திருக்கும் அழுக்குகளையும் அதிகப்படியான எண்ணையையும் அகற்றுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

தேவையானவை : நாட்டுச் சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் – 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – 15 துளிகள். ஹேர் கண்டிஷனர்- 2 டீ ஸ்பூன்

மேலே சொன்ன மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இவற்றை தலையில் தலையில் தடவி, ஸ்கால்பில் தேயுங்கள். அழுந்த தேய்க்கக் கூடாது.

15 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு கழுவவும். வாரம் ஒரு முறை செய்து பாருங்கள். தலைமுடி பலம் பெற்று, வளரத் தொடங்கும்.

இலந்தை எண்ணெய் நாட்டுச் சர்க்கரை : நாட்டுச் சர்க்கரை- 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு -2 ஸ்பூன் இலந்தை எண்ணெய் -2 ஸ்பூன் கடல் உப்பு -1 ஸ்பூன்.

முதலில் நாட்டுச் சர்க்கரையையும் கடல் உப்பையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இவற்றில், இலந்தை எண்ணெயை ஊற்றவும். பின் கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

தலையை ஈரப்படுத்திய பின், இந்த கலவையை தலையில் தடவவும். நன்றாக தேய்த்து, பின் ஷாம்பு கொண்டு அலாசுங்கள். இது முடி உதிர்தலுக்கு நல்ல பலனைத் தரும்.

சமையல் சோடா மற்றும் நாட்டு சர்க்கரை : இந்த கலவை தலையில் ஏற்படும் பொடுகினை கட்டுப்படுத்தும். பேக்டீரியாக்களின் தொற்றுக்களையும் நீக்குகிறது.

தேவையானவை : நாட்டு சர்க்கரை – 1 டீ ஸ்பூன் தரமான ஷாம்பு – 1 டேபிள் ஸ்பூன் தேயிலை மர எண்ணெய் – 3 துளிகள் சமையல் சோடா – 1 டீ ஸ்பூன்

மேலே சொன்னவற்றை எல்லாம் நன்றாக கலக்கவும். இவற்றை தலையில் தடவி, ஸ்கால்ப்பில் வேர்க்கால்களை தூண்டுவதை போல் மசாஜ் செய்யுங்கள். சில நிமிடங்கள் கழித்து தலையை வெதுவெதுப்பான நீரினால் அலசவும்.

அழகு ஸ்க்ரப் : நாட்டுச் சர்க்கரை கூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மேஜிக் செய்யும். வெயிலினால், பாதம், கைகள், மற்றும் கழுத்து ஆகியவை நிறம் மங்கிப் போய் பொலிவின்றி இருக்கும்.

நாட்டுச் சர்க்கரையை இந்த பகுதிகளின் தினமும் தேய்த்து கழுவுங்கள். உங்கள் சருமத்தில் உள்ள கருமை போய், மின்னும். முயன்று பாருங்கள்.

இளமையாக சருமத்தை பெற : நாட்டுச் சர்க்கரையில் கிளைகாலிக் அமிலம் உள்ளது. இதைத்தான் எல்லா அழகு சாதனங்களிலும் பயன்படுத்துகிறார்கள். இவை முகத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து, சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது.

முகப்பருக்களை எதிர்க்கிறது : முகப்பருக்களை உண்டாக்கும் கிருமிகளையும் கொழுப்பு செல்களையும் எதிர்த்து போராடுகிறது. முகத்தில் படியும் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கிறது. தினமும் உபயோகித்து வந்தால், முகப்பருக்கள் வராது. முகப்பருக்களினால் வரும் தழும்புகளையும் மறையச் செய்யும்.

இன்றிலிருந்தே நாட்டுச் சர்க்கரை உபயோகித்துப் பாருங்கள். மின்னும் சருமத்தையும், கருமையான கூந்தலையும் பெறுவீர்கள்.

4 14 1465883758

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button