மருத்துவ குறிப்பு

அதிகாலையில் வேகமாக எழுவதற்கான சில வழிகள்!!!

பெரும்பாலான மக்கள் காலையில் தாமதமாகவே எழுகின்றனர். இப்படி தாமதமாக எழுவதால், பலரும் அலுவலகத்திற்கு அவசர அவசரமாக கிளம்ப வேண்டியுள்ளது. பலர் இதனாலேயே காலை உணவை தவிர்க்கின்றனர். அதுமட்டுமின்றி, நேரமாகிவிட்டது என்று கண்மூடித்தனமாக பைக்கை ஓட்டிக் கொண்டு சென்று விபத்துக்களை சந்திக்கின்றனர்.

எனவே இந்த பிரச்சனையை தவிர்க்க பலரும் காலையில் வேகமாக எழ முயற்சிக்கின்றனர். இருப்பினும் முடியவில்லை. ஆனால் காலையில் வேகமாக எழுவதற்கு நம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால் போதும். நிச்சயம் அதிகாலையில் நேரமாக எழுந்து, பொறுமையாகவும், டென்சன் இல்லாமலும் வேலைக்கு கிளம்பலாம்.

சரி, இப்போது அதிகாலையில் வேகமாக எழுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போமா!!!

மாலையில் வீட்டிற்கு வேகமாக செல்லவும் காலையில் வேகமாக எழ வேண்டுமெனில், முதலில் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு மாலையில் வேகமாக செல்ல வேண்டும். மேலும் மாலையில் வீட்டிற்கு சென்ற பின், குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவழித்தால், மனம் மட்டுமின்றி, உடலும் ரிலாக்ஸ் ஆகும்.

குளிக்கவும் தூங்க செல்லும் முன் குளியல் மேற்கொண்டால், இரவில் நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். அதிலும் இரவில் சீக்கிரம் குளித்துவிட்டு தூங்கினால், காலையில் அலாரம் அடிப்பதற்கு முன்பே எழ முடியும்.

இரவு உணவு இரவில் தாமதமாக, அதுவும் ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக அசைவ உணவுகள் உண்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதனால் செரிமானம் சீராக நடைபெற்று, தூக்கத்திற்கு இடையூறு ஏதும் நேராமல் இருக்கும். தூக்கத்திற்கு இடையூறு ஏற்படாமல் நிம்மதியான தூக்கத்தை ஒருவர் மேற்கொண்டால், காலையில் வேகமாக எழலாம்.

சீக்கிரம் தூங்க செல்லவும் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பின், செய்யும் வேலையை சீக்கிரம் முடித்துக் கொள்ளவும். இதனால் இரவில் தூங்குவதற்கு நேரம் அதிகம் கிடைத்து, நீண்ட நேரம் உடலை ரிலாக்ஸ் செய்யலாம். முக்கியமாக இரவில் சீக்கிரம் தூங்க சென்றால், 7 மணிநேரத்திற்கு பின் தானாக விழித்துவிடுவோம். ஏனெனில் சில நேரங்களில் உடலும் அதிகமான தூக்கத்தை விரும்பாது.

டிவி பார்க்க வேண்டாம் இதை பலரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இருப்பினும் பலரால் ரவில் டிவி பார்க்கும் பழக்கத்தை மட்டும் நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே அதிகாலையில் சீக்கிரம் எழ முடியவில்லை. ஆனால் ஒருவேளை இப்பழக்கத்தை சரியாக பின்பற்றி வந்தால், கட்டாயம் சீக்கிரம் எழ முடியும். வேண்டுமெனில் முயற்சித்து தான் பாருங்களேன்…

மன அழுத்தத்தைக் குறையுங்கள்
அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்த பின், மனதை அமைதிப்படுத்த வெளியே காற்றோட்டமாக சிறிது தூரம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இதனால் இரவில் நிச்சயம் நல்ல தூக்கத்தைப் பெற்று, அதிகாலையில் வேகமாக எழ முடியும்.

ஒரே நேரத்தை கடைப்பிடியுங்கள் முக்கியமாக விடுமுறை நாளாக இருந்தாலும் சரி, அனைத்து நாட்களிலும் ஒரே பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் கடிகாரமானது அப்பழக்கத்திற்கு தகுந்தவாறு மாறிக் கொள்ளும். வேண்டுமெனில் ஒரு வாரம் ஒரே மாதிரியான பழக்கத்தை மேற்கொண்டு வாருங்கள். பின் அந்த மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

22 1437564161 7 early

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button