மருத்துவ குறிப்பு

புதினா… மணத்துடன் மருத்துவ குணமும்

நம் சமையலில் மணத்துக்காகச் சேர்க்கப்படும் புதினா, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

புதினா… மணத்துடன் மருத்துவ குணமும்
நம் சமையலில் மணத்துக்காகச் சேர்க்கப்படும் புதினா, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

உதாரணமாக, நாம் சாப்பிடும் அசைவ உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது. பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

புதினா கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், உடம்பில் ரத்தத்தைச் சுத்தம் செய்து வாய் துர்நாற்றத்தைப் போக்கும். மலச்சிக்கல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

புதினா, வயிற்றில் உள்ள புழுக்களை அழித்து, வாயுத் தொல்லையைப் போக்குகிறது.

தசைவலி, நரம்புவலி, தலைவலி, மூட்டு வலி போன்ற வலி உள்ள இடங்களில், புதினாவை நீர் விடாமல் அரைத்து, பற்றுப் போட்டுவந்தால், வலிகள் மறையும். ஆஸ்துமா ஏற்படாமலும் புதினா தடுக்கிறது.

மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், ரத்தசோகை, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த புதினா கீரையை தினமும் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

முகப்பரு மற்றும் வறண்ட சருமம் உள்ளவர்கள், புதினா கீரையின் சாறை முகத்தில் பருக்கள் உள்ள இடங்களில் தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகம் பளபளப்பாகும்.

புதினா இலைகளைக் காயவைத்து, பின் அதை பாலில் சேர்த்துக் கொதிக்கவைத்து தினமும் அதைக் குடித்து வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும், வயிற்றுப்போக்கு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுக்கும். 201610221356443138 mint medical benefits SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button