முகப்பரு

முகப்பருத் தழும்பு மறையவில்லையா? இவற்றை உபயோகப்படுத்துங்க

முகப்பருக்கள் வந்து போனாலும், முகப்பருக்களால் வந்த தழும்புகளைப் போக்கச் செய்வது சிறிது கஷ்டமான காரியம்தான். முகப்பருக்கள் வருவது நின்று போனபோதும், அதன் தழும்புகள் ஆயுள் வரைக்கும் சிலருக்கு நிலைத்து நிற்கும். முகப்பருத்தழும்புகள் போக்க என்னன்னவோ செய்து பாத்திருக்கிறீர்கள். இருந்தும் போகாமல் அடம்பிடிக்கிறதா? அப்படியெனில் நீங்கள் அவசரப்படுகிறீர்கள். உடனடியாக மேஜிக் நடந்து காணாமல் போகவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. தழும்புகள் மறைய சிறிது காலம் தேவைப்படும்.

ஆகவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து இந்த அழகுக் குறிப்புகளை பயன்படுத்தினால் பலன் நிச்சயம் கடைக்கும். அப்படியான சில குறிப்புகள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளை உபயோகப்படுத்திப் பாருங்கள். தழும்புகள் விரைவில் மறையும்.

கருப்பு உளுந்து + சந்தனம் : கருப்பு உளுந்தை பொடி செய்து அதனுடன் சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, பேஸ்ட் போலாக்கி, இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவுங்கள். மறு நாள் காலையில் கழுவவும். இவை பெரிய பெரிய பள்ளம் விழுந்த முகப்பருத் தழும்புகளுக்கு சிறந்த குறிப்பாக இருக்கும். நாளடைவில் தழும்பினை மறையச் செய்து, சருமத்தை மிருதுவாக்கும்.

புளிப்பு க்ரீம் + ஓட்ஸ் : கடைகளில் புளிப்பு க்ரீம்கள் கிடைக்கும். லேக்டோபேசிலஸ் க்ரீமை புளிப்படைந்து காணப்படும். புளிப்பு க்ரீம் கிடைக்கவில்லையென்றால், புளித்த தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டும் ஒன்றுதான். புளிப்பு க்ரீம் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து, முகத்தில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

தக்காளி + வெள்ளரி : தக்காளியையும் வெள்ளரியையும் மிக்ஸியில் அரைத்து, அதனை மாஸ்க் போல முகத்தில் போடுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவவௌம். தினமும் இதனை செய்யலாம். விரைவில் முகப்படுத்தழும்பு காணாமல் போய்விடும்.

லாவெண்டர் எண்ணெய் + சந்தனம்: லாவெண்டர் எண்ணெயுடன் சந்தனம் கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். லாவெண்டரை தனியாகவும் பயன்படுத்தலாம். லாவெண்டர் எண்ணெய் முகப்பருத் தழும்பை நீக்கிவதில் சிறந்த மூலிகையாகும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன் லாவெண்டர் எண்ணெயை முகத்தில் தேய்த்து தூங்கச் செல்லவும்.மெல்ல மெல்ல தழும்பு மறைவதை காண்பீர்கள்.

cream 13 1468388395

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button