மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு செல்போன் தொந்தரவா?

பெண்கள் செல்போன் தொந்தரவிலிருந்து தப்பிக்க சில ஆலோசனைகள்

ஆண்களுடன் தனிமையில் பேசுவதை தவிர்த்திடுங்கள். அதுவும் காட்சியாக பதிவாகிவிடும். பழகும் நபர் எப்படிபட்டவர் என்று தெரியாத நிலையில் நன் நட்பை உறுதி செய்யும் வகையிலான எஸ்எம்எஸ்களை பெண்கள் தவிர்த்திட வேண்டும்.

மகளிர் விடுதியில் தங்கும் பெண்கள் அதிகமான அளவில் எந்தத்தவறும் செய்யாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். திருமணமான ஒருசில பெண்கள் இத்தகைய ஆண்களிடம் சி்க்கிக்கொண்டு தப்பமுடியாமல் தற்கொலையும் செய்கிறார்கள். ஆனால் தற்கொலை இதற்கு தீர்வு அல்ல. பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக போலீஸ் உதவியை நாடவேண்டும்.

பெண்கள் சிக்கலில் மாட்டிய பிறகு எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிப்பதை தவிர்த்து முதலிலேயே கவனமாக இருந்து இந்த விஞ்ஞான நாசக்காரர்கள் வலைக்குள் சி்க்கிக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது. மச்சி சாப்பிட்டாயா என்று கேட்பதில் தொடங்கி குட்நைட் டியர் என்று வழிவது வரை செல்போன் வழியே குறுஞ்செய்திகளை அனுப்புகிறார்கள். இதுபோல படங்கள், வீடியோக்கள், ரெக்கார்டிங், தகவல்களை எஸ்எம்எஸ் என்ற முறையில் அனுப்புகிறார்கள்.

அறிவியல் நவீன தொழில்நுட்பமான எஸ்எம்எஸ் தகவல் தொடர்புக்கு அவசியமான அற்புத தொழில்நுட்பம் என்றால் அதில் மிகையில்லை. ஆனால் அவற்றால் எல்லையற்ற பிரச்சனைகள் முளைத்திருப்பதால் குற்றம் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை.

படம்பிடிக்கவும் பிறகு பயமுறுத்தவும் பயன்படும் எஸ்எம்எஸ் கள் பல பெண்களின் வாழ்க்கையை பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது. இன்னொருபுறத்தில் எஸ்எம்எஸ் ஆபாசக் காட்சிகள் இளைஞர்களை செக்ஸ போதை அடிமைகளாக மாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் பாதிப்பு என்னவோ பெண்களுக்குத்தான் அதிகம். அதனால் பெண்கள் இதில் மிகுந்த விழிப்புணர்வு பெறவேண்டும். SvFGEmk

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button