சரும பராமரிப்பு

வராக மித்ரர் சொன்ன சில ரகசிய அழகு குறிப்புகள்!!

அந்த காலங்களில் வாழ்ந்த பெண்களுக்கு சுருக்கங்கள் மிகத் தாமதமாகத்தான் எட்டிப் பார்த்தது. காரணம் கெமிக்கல் இல்லாத அழகு சாதனங்கள். இன்று நாம் சுருக்கங்களையும், சரும பிரச்சனைகளையும் மறைக்க மேக்கப் போட்டு மறைக்கிறோம்.

நாம் சுலபமாக இருக்க வேண்டுமென்று சோப், க்ளென்ஸர் என்று வாங்கி அதனை உபயோகிக்கிறோம். ஆனால் அவை நமக்கு தெரியாமலே ஒவ்வொரு தினமாய் நம் சருமத்தை பாழ்படுத்துகிறது.

இதனால்தான் இன்றைய காலகட்டங்களில் சரும பாதிப்புகளால் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இயற்கையான மூலிகைகள் இன்றும் கிடைக்கின்றன. அவற்றை நாம்தான் பார்ப்பதில்லை.

இயற்கை மூலிகைகள் நம் சருமத்தை பாழ்ப்படுத்துவதில்லை. சுருக்கங்கள், முகப்பரு, கரும்புள்ளி, கருமை, தேமல், படர்தாமரை ஆகிவற்றை அடியோடு நீக்கிவிடும். ஒரு முறை முயன்று பாருங்கள்.

இதில் சொல்லப்படும் எல்லா மூலிகைகளும் நாட்டு மருந்துகளில் கிடைக்கும். ஒருமுறை வாங்கி வத்தால், நிறைய மாதங்களுக்கு வரும்படி நீங்கள் தயார் செய்து கொள்ளலாம்.

முகத்திற்கான ஸ்க்ரப் : உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம் கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம் கோரை கிழங்கு பொடி 100 கிராம் உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்

இவற்றை வாங்கி காயவைத்து தனிதனியாக பொடித்துக் கொள்ளுங்கள். பின்னர் எல்லாவ்ற்றையும் கலந்து, ஒருசேர மிக்ஸியில் அரைத்து, ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பால் அல்லது ரோஸ் வாட்டரில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும். இந்த அழகுக் குறிப்பு வராகமித்ரர் அங்கரசனைகள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

குளியல் பொடி: சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

குளியல் பொடி செய்வது எப்படி? பெண் குழந்தைகளுக்கும், வளரும் சிறுமிகளுக்கும் இந்த குளியல் பொடியை தேய்த்து தினமும் குளிக்க வைத்தால், தேவையற்ற முடிகள் வளராது. உதிர்ந்துவிடும். மேனி மென்மையாக இருக்கும்.

பச்சைப் பயிறு – 500 கிராம் கடலை பருப்பு – 200 கிராம் சோம்பு 100 கிராம் கஸ்தூரி மஞ்சள் 100 கிராம் வெட்டி வேர் 200 கிராம் சந்தனத் தூள் 300 கிராம் கார்போக அரிசி 200 கிராம் கோரைக்கிழங்கு 200 கிராம்

இவைகளை வெயிலில் நன்றாக காயவைத்து தனித்தனியாக அரைக்கவும். பின் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒருமுறை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் குளிக்கும்போது, இந்த பொடியை சிறிது எடுத்து பூசி வந்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும். தொடர்ந்து இந்த பொடியை உபயோகித்து குளித்து வந்தால், சரும நோய்களான சொறி, சிரங்கு, போன்ற எல்லாவித சரும நோய்களும் சரியாகிவிடும்.

அதோடு, முகப்பரு, கரும்புள்ளி போன்றவையும் மறைந்து முகம் தேஜஸ் பெறும். வியர்வை வராது. மேனி அழகுபெறும். இதனை குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். தேவையற்ற முடிகள் வளராது. பார்லரில் சென்று வேக்ஸிங், செய்ய தேவையில்லை.

massage 18 1468819655

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button