ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.. உடனே மருத்துவரிடம் போயிடுங்க…!

கல்லீரல் உடலின் ஒரு முக்கியமான உள்ளுறுப்பாகும். இது உடலின் சீரான இயக்கத்திற்குப் பலவகைகளிலும் பணிபுரியும் முதன்மை வாய்ந்த உறுப்புகளில் ஒன்று.

ஒரு மனிதனுக்கு கீழ் கண்ட விடயங்களை ஒட்டி ஏதேனும் அறிகுறிகள் தெரிந்தால் அவர்களுக்கு கல்லீரலில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அர்த்தம். அவர்கள் உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை நடத்தினால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

வயிற்று கோளாறு

வயிறு செரிமானம் சம்மந்தமாக தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்தால் அது கூட கல்லீரல் சேதத்திற்கான அறிகுறி தான். மேலும் மிக இளவயதில் கர்ப்பம் தரிப்பது, மன சோர்வு ஆகிய காரணங்களால் கூட கல்லீரல் பாதிப்படைய அதிக வாய்ப்புள்ளது.

களைப்பு

உடலும், மனமும் ஒரு வித களைப்பு மற்றும் மந்தமான சூழலிலேயே தொடர்ந்து இருந்து வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நலம். ஏனேன்றால் இது கூட கல்லீரல் பாதிப்புகான அறிகுறிகள் தான்.

எடை குறைதல்

பசி எடுக்காமலும், உடல் எடை திடீரென அதிக அளவில் குறைந்தாலும் கூட கல்லீரலில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

சிறுநீர் நிறம் மாறுதல்

நாம் அதிக அளவில் தண்ணீர் குடிக்கும் போது வரும் சிறுநீரானது தொடர்ந்து மஞ்சள் நிறத்தில் வந்தால் அது கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியாகும்.

மலக்கழிவில் மாற்றம்

மலம் கழிக்கும் போது அதன் நிறம் பழுப்பிலிருந்து நல்ல மஞ்சளாகவோ, சாம்பலாகவே மாறினால் கல்லீரலில் சேதம் இருப்பதாக அர்த்தமாகும்.

மஞ்சள் காமாலை

கடுமையான மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு அதன் மூலம் கணையம் மற்றும் பித்தப்பை பாதிப்படைந்தால் கூட அது கல்லீரலையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

வயிற்று வலி

கீழ் வயிற்றில் தொடர்ந்து வலி இருந்து வந்தால் கல்லீரலில் சேதம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம், உடனே மருத்துவரை அணுகவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button