கேக் செய்முறை

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக்

கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேட் தான் எப்போதுமே சிறந்தது. இப்போது ஃபுரூட் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் 1 மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது 1 வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள்.

தேவையான பொருட்கள் :

கேரமலுக்கு.

சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்

கேக்கிற்கு.

மைதா – 2 1/2 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் – 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்
பட்டை தூள் – 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் – 1 கப்
நாட்டுச்சர்க்கரை – 1 1/2 கப்
முட்டை – 5
வென்னிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்
கேரமல் – 1 கப்
ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் – 3 கப்
ரம் – 5 டீஸ்பூன்

கேரமல் செய்முறை :

* முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம். சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சர்க்கரை அடிப் பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.

* சர்க்கரையானது கரைந்து பொன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்கவேண்டும்.

கேக் செய்முறை :

* முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் 2, 8×2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு பௌலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு பௌலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு அடிக்க வேண்டும்.

* பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்கு கிளறிவிடவேண்டும்.

* பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சேர்த்து கிளறி விட வேண்டும்.

* பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.

* இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம் பேக் செய்ய வேண்டும். இவ்வளவு 1 நேரம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும்போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.

* பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, பின் பேனில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.

* பின் கேக்கின் ஆங்காங்கு லேசான ஓட்டைகளைப் போட்டு, கேக்கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக் ரெடி.201612241012037127 Special Christmas Fruit Cake SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button