ஃபேஷன்

பெண்களுக்கு அழகு தரும் ஆடைகள்

குண்டாக, ஒல்லியாக உள்ள பெண்களுக்கு எந்த வகை வகையில் ஆடை அணிந்தால் அழகாக இருக்கும் என்பதை பற்றிய குறிப்புகளை கீழே விரிவாக பார்க்கலாம்.

பெண்களுக்கு அழகு தரும் ஆடைகள்
பெண்கள் அணியும் ஆடைகள் அவர்களுக்கு அழகையும், தன்னம்பிக்கையையும் தரவேண்டும். ஆனால் பெண்களில் ஒருபகுதியினர் தங்கள் உடைகளில் திருப்தியடைவதில்லை. அதற்கு காரணம் அவர்களது உடல் அமைப்பு. ஒல்லியாகவோ அல்லது குண்டாகவோ இருக்கும் பெண்கள் தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற உடை எது? என்று தெரியாமல் தவித்துப்போகிறார்கள். அதிக நிறத்துடன் காட்சியளிப்பவர்களும், சுமாரான நிறத்தில் தோன்றுகிறவர்களும், தங்களுக்கு எந்த நிறத்திலான உடை பொருத்தமாக இருக்கும்? என்று குழம்புகிறார்கள். அவர்கள் குழப்பம் நீங்கி, அழகான உடைகளை தேர்ந்தெடுக்க தேவையான ஆலோசனைகள்!

* சில பெண்களின் ஒட்டுமொத்த உடல்வாகு ஒல்லியாகத் தோன்றும். ஆனால் கால்கள் மற்றும் சற்று தடித்த நிலையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் லெகின்ஸ் அணிய விரும்பலாம். அவர்கள் அடர்ந்த நிறத்திலான லெகின்ஸை தேர்ந்தெடுக்கவேண்டும். சற்று குண்டான கால்களை இது ஓரளவு ஒல்லியாக காட்டும். இவர்கள் பொதுவாகவே உடலை இறுக்கிப்பிடிக்கும் உடைகளை தவிர்ப்பது நல்லது. சற்று கெட்டியான மெட்டீரியலில் தயார் செய்யப்பட்ட லெகின்ஸ்களை அவர்கள் தேர்ந்தெடுத்து அணியவேண்டும். காபி பிரவுன், அடர் பச்சை, கறுப்பு, நேவி ப்ளூ, பர்பிள்.. போன்ற நிறங்கள் அவர்களுக்கு பொருத்தமானது. இளம் நிறத்திலான குர்தியை இதற்கு மேலாடையாக அணியலாம்.

* புடவையில், செதுக்கிய சிற்பம் போன்ற உடல் அமைப்புடன் தோன்ற எல்லா பெண்களும் விரும்புகிறார்கள். அவர்களது ஆசை நிறைவேற வாய்ப்பிருக்கிறது. மெல்லிய உடல் தோற்றம் கொண்ட வர்கள் ஜூட் சில்க், டஸ்ஸர், ஸ்டிப் காட்டன், ஆர்கண்டி போன்ற மெட்டீரியல் புடவைகளை உடுத்தலாம். சில்க் புடவைகளை பிளட் செய்யாமல் ஒன் லேயராக உடுத்தலாம். ஒல்லியாக, உயரமாக தோன்றுகிறவர்கள் சற்று கெட்டியான புடவையை பயன்படுத்தலாம். இவர்களுக்கு இளம் நிறங்கள், போல்ட் பிரிண்டுகள், அகலமான பார்டர் கொண்ட புடவைகள் பொருத்தமாக இருக்கும்.

குள்ளமான, தடிமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு சாப்ட் சில்க், மட்கா, மால்குடி மெட்டீரியல்கள் ஏற்றது. அவர்கள் சரும நிறத்துக்கு ஏற்ற அடர்நிறங்களை தேர்ந்தெடுக்கவேண்டும். இதனை நன்றாக பிளட் செய்து உடுத்தினால், உடலுக்கு பொருத்தமாகவும், சற்று உயரம் கூடுத லாகவும் தெரியும்.

* பெரிய பதவிகளில் இருப்பவர்களின் உடை அலங்காரம், மேக்-அப் போன்ற அனைத்துமே யதார்த்தமாக, மிதமானதாக அமைந்திருக்கவேண்டும். ஆபரணம் அணிவதிலும் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். சற்று கனமான ஒரே ஒரு ஆபரணம் அணிந்தால் போதுமானது. உடைகளை பொருத்தவரையில் புடவையும், குர்த்தியும் ‘செமி பார்மல் லுக்’ கொடுக்கும். லினன் பேண்ட், டாப்பும் ‘செமி பார்மல் லுக்’ தரும். எந்த உடையாக இருந்தாலும் பெரிய ‘காலர்’, ‘த்ரீ போர்த்’ அல்லது ‘புல் லென்த் ஸ்லீவ்’ பொருந்தும். மெஜந்தா, லெமன், மஞ்சள் போன்ற பளிச் நிறங்களை தவிர்க்கவேண்டும்.

சரும நிறத்திற்கு பொருத்தமான நிறத்தில் உடைகளை தேர்ந்தெடுக்க பெண்கள் தெரிந்துகொள்ளவேண்டும். தேன் நிறத்திலான சருமம் என்றால் கேரள கசவு புடவையின் ஐவரி நிறம் பொருத்தமாக இருக்கும். இளம் தவிட்டு நிறம், மெருன், இளம் பிங்க், இளம் நீலம் போன்றவை பொதுவாக தேன் நிற சருமத்திற்கு பொருந்தும்.

சிவப்பு நிறம் கொண்டவர்களுக்கு அனேகமாக எல்லா நிறங்களும் பொருத்தமாக இருக்கும். பளிச் நிறங்கள் அவர்கள் அழகை தூக்கலாக்கும். மெட்டாலிக்ஸ், ஷிம்மர் ஷேட்ஸ் போன்றவைகளும் சிவப்பு நிற சருமத்திற்கு ஏற்றது.

* உயரமாக, தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து நிற்பவர் களுக்கு ‘லாங்க் ஸ்கர்ட்ஸ்’ பொருத்தமாக இருக்கும். கால் பாதம் வரை மறைக்கும் ‘போஹோ ஸ்கர்ட்’ அதிக அழகுதரும். சிங்கிள் கலர் ஸ்கர்ட் வித் பிராட் பார்டர் வகை இப்போது இளம் பெண்களால் அதிகம் விரும்பி அணியப்படுகிறது. கலம்காரி, ஜெய்ப்பூர் பிரிண்ட் மெட்டீரியல்கள் இந்த வகை பார்டருக்கு ஏற்றது.

ஜாமெட்ரிக் அல்லது புளோரல் பிரிண்ட் கொண்ட ஸ்கர்ட்டுகள் பெரும்பாலான பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும். அடுக்கடுக்காக தோன்றும் ‘டயர்ஸ் ஸ்கர்ட்டும்’ நன்றாக இருக்கும். இத்தகைய ஸ்கர்ட்டுகள் அணியும்போது சிங்கிள் கலர் டாப் அணிவது பொருத்தமானது. ஸ்லீவ் லெஸ் டாப்பும் அழகுதரும். இந்த ஸ்கர்ட், டாப் அணியும்போது சில்வர் அல்லது பழங்குடியின மக்கள் அணிவது போன்ற ஆபரணம் அணிவது மெருகேற்றும்.201612260815007757 beauty of women clothing SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button