கால்கள் பராமரிப்பு

அழகை கெடுக்கும் பாத வெடிப்பை தீர்க்கும் இயற்கை வழிமுறை

பாத வெடிப்பு எதனால் ஏற்படுகிறது, பாத வெடிப்பை இயற்கை வழிமுறை பின்பற்றி எப்படி குணப்படுத்தால் என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

அழகை கெடுக்கும் பாத வெடிப்பை தீர்க்கும் இயற்கை வழிமுறை
பெண்கள் அவர்களுடைய தோலுக்கும் காலுக்கும் ஏற்ற தரமான செருப்பைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும். ஹை ஹீல்ஸ் அல்லது கடினமான செருப்புக்களை அணிவதால் கால் பாதங்களில் சிறுகச் சிறுக வெடிப்பு தோன்ற ஆரம்பிக்கும். சோப்பில் உள்ள வேதிப்பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுத்திவிடும். எனவே பிரச்சனையின் வேர் என்னவென்று தெரிந்து கொண்டால் அதற்கேற்றவாறு தீர்வை கண்டுபிடிப்பது எளிது. கால் பாதங்களின் அழகை மீட்டெடுக்க, இதோ சில எளிய வழிகள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்தில் ஒரு நாள் இந்த எளிய மருத்துவத்தை வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

சிறிதளவு எலுமிச்சை சாறு எடுத்து, பாதங்களில் மேல் மற்றும் கீழ் நன்கு தேய்த்துவிட்டு, ஒரு டப்பில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிது உப்பு சேர்த்து சிறிதளவு ரோஸ் வாட்டர் ஊற்றி கால்களை அதனுள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு 15 நிமிடம் அப்படியே உட்கார்ந்திருக்கவும்.

அதன் பின் மைல்ட் ஷாம்பூ அல்லது சோப் போட்டு பாதங்களை நன்றாக கழுவவும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

சுத்தமான காட்டன் துணியால் பாதங்களை ஒற்றி எடுத்த பின், மாய்ஸ்சரைஸர் தடவவும்.

தொடர்ந்து இப்படி செய்து வருகையில், பாதம் பட்டுப் போல் பளபளப்பதுடன் வெடிப்பு மறைந்து கால் பாதங்கள் மென்மையாக மாறிவிடும். எலுமிச்சை சாறுடன் மருதாணி, பப்பாளி கூழ் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் குளிப்பதற்கு முன்னால் கால் பகுதிகளில் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து பத்து நிமிடமாவது ஊற வைத்தபின் குளிக்கவும். கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.201612281348162134 natural way solving feet care SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button