சூப் வகைகள்

கேரட் தக்காளி சூப்

என்னென்ன தேவை?

கேரட் – 2
தக்காளி – 2
வெங்காயம் – 1
பிரஞ்சு பீன்ஸ் – 5-6 (விரும்பினால்)
பூண்டு – 3-4
சீரகத் தூள் – ½ தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை (விரும்பினால்)
கருப்பு மிளகு தூள் – 2 முதல் 3 மேஜைக்கரண்டி
தண்ணீர் – 2 கப்
வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் – 1.5 தேக்கரண்டி
கருப்பு உப்பு – சிறிது

எப்படிச் செய்வது?

முதலில் கேரட் மற்றும் வெங்காயத்தின் தோலை உறிக்கவும். பின் ஒரு குக்கரில் கேரட், தக்காளி, வெங்காயம், பூண்டு, பிரஞ்சு பீன்ஸ் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2-3 விசில் விட்டு நன்றாக வேக விடவும். பின் அவற்றை நன்கு மசித்து வைக்கவும். ஒரு சிறிய கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி சீரகத் தூள், உப்பு சேர்க்கவும். பின் மசித்து வைத்துள்ள கலவையை சேர்த்து 2-3 நிமிடங்கள் இளங்கொதிவிடவும். பிறகு மிளகு தூள், கருப்பு உப்பு, சிறிது சேர்த்து கொத்தமல்லி இலைகள் மேலே தூவி அல்லது சீஸ் கொண்டு சூப்பை அழகுபடுத்தவும்.r1OF0O1

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button