மருத்துவ குறிப்பு

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்

மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீழே பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.

சளி மற்றும் இருமலுக்கான பாட்டி வைத்தியங்கள்
தற்போதுள்ள மார்கழி பனியால் ஏராளமானோர் இருமல், சளி போன்றவற்றால் கடுமையாக அவஸ்தைப்படுவார்கள். நீங்களும் இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.

அதிலும் நம் பாட்டிமார்கள் பின்பற்றிய வைத்தியங்களைப் பின்பற்றினால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். இங்கு சளி, இருமலுக்கான சில பாட்டி வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி, சளி, இருமலில் இருந்து விடுபடுங்கள்.

ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடிப்பதன் மூலமும் சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.

கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.201701031407339132 Grandma remedies for colds and cough SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button