மருத்துவ குறிப்பு

குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்

அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பம் என்றால் பிரச்சனைகள் வருவது சகஜம் தான்.. அந்த பிரச்சனைகள் சில நேரங்களில் பூகம்பமாக வெடிக்கும்…

குடும்பம் என்றால் பிரச்சினைகள் வருவது சகஜம்தான்
குடும்ப வாழ்க்கை அழகாக இருக்க என்ன செய்யலாம் என்று தேடிய பொழுது கிடைத்த பயனுள்ள தகவல்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்…

1. அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க முதல் காரணம் பெண்கள் தான்.. குடும்ப தலைவியாக வீட்டுக்கு வரும் பெண்ணின் கையில் தான் வெற்றியிருக்கு.. இதனை உணர்ந்து நாம் குடும்பத்தினை அழகான முறையில் வழி நடந்த வேண்டும்..

2. எப்பொழுதும் முகத்தில் புன்னைகையுடன் இருக்க மறுக்காதீங்க..

3. குடும்பத்தில் இருக்கும் ஓவ்வொருவரையும் மதிக்க பழகுங்கள்.. மற்றவர்களின் மனநிலைக்கு தகுந்தது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.. (விட்டுகொடுத்து பழகுங்கள்) நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும் என்ற அகம்பாவம் வேண்டாம்.

4. தாழ்வு மனப்பான்மையினை அடியோடு அப்புறப்படுத்துங்கள். அனைவரிடமும் சகஜமாக பேசுகள்.. மனம் திறந்து பாராட்டுங்கள்.

5. சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதுக்கு கை, கால் வைத்து அழகுபடுத்த வேண்டாம்.. எந்த வகை பிரச்சனை வந்தாலும் சம்பந்தபட்ட நபரிடம் பேசி பாருங்கள்.. கேட்கவில்லையா துஷ்டனை கண்டால் தூர விலகு என்று விலகிவிடுங்கள்.

6. வாழ்க்கையின் பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுகள்.. பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்.. தேவையற்ற குழப்பங்களை மனதில் ஏற்ற வேணடாம்..

7. இறைவன் கொடுத்த இந்த அழகான இறைய நாளை நான் பயனுள்ளதாக தான் செலவு செய்வேன் என்ற மன உறுதியுடன் தேவையான நல்ல சிந்தனைகளை மட்டுமே சிந்தித்து அதன் வழியே செலவு செய்யுங்கள்.

8. நாம் சந்தோஷமாக இருந்தால் நம்மை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்..என்பதனை மனதில் கொண்டு சிரித்தமுகத்துடன் பேசி பழகுங்கள்..

9. உங்கள் இஷ்டம் போல் உங்கள் குடும்ப நண்பர்கள் கேட்க வேண்டும் என்று எண்ணம் வைக்காதீங்க.. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று பிடிவாதம் பிடிக்காதீங்க.. மற்றவர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பேச பழகுங்கள்.

10. குழந்தைகளுடன் சந்தோஷமாக பேசி, விளையாடி இருங்கள்.. சிறு குழந்தையாக இருக்கும் குட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை ரசியுங்கள்… சேட்டை அதிகமானால் கண்டிக்க மறுக்காதிங்க…

11. நம் உடல் ஆரோக்கியம் இல்லாத பொழுது தான் மனதில் சந்தோஷம் நம்மை விட்டு போகும்.. முடிந்த வரை உடலை ஆரோக்கியமாக வைக்க பாருங்க.. சில நேரங்களில் வரும் சின்ன சின்ன நோய்களை பெரிதுபடுத்தாமல் வீட்டில் இருக்கும் பொரியவர்களிடம் என்னால் இன்று உடம்புக்கு முடியவில்லை என்று சொல்லிவிட்டு ஓய்வு எடுங்கள்.

12. எல்லா நேரமும் வேலை வேலை என்று இருக்காமல் உங்களுக்கு என்று ஒரு சில மணி நேரங்கள் ஓய்வெடுத்து உங்களுக்கு பிடித்தகாரியங்களில் ஈடுபடுங்கள்.. உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல் உங்கள் மனதுக்கும் ஒய்வு கொடுங்கள்.

13. குடும்பத்தில் பிரச்சனைகள் வரும் பொழுதோ அல்லது டென்ஷன் அதிகமாக இருக்கும் பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்காதிங்க.

14. முடிந்த வரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய் சிரித்து பேசி பழகுங்கள்…

15. குடும்ப வாழ்க்கை என்பது நாம் செய்யும் சமையல் போன்றது.. உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு அளவாக இருப்பது முக்கியம்.. அதனை பக்குவமாக செய்வது குடும்ப தலைவியாக இருக்கும் ஓவ்வொரு பெண்ணில் கையில் தான் இருக்கு..

16. மற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம் மனதினை மேலும் மேலும் குப்பையாக்குகிறது.. அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.. மனது தூய்மையாகும்…

அன்பு தோழிகளே .. இனி முடிந்தவரை நம்மை மாற்றி கொள்வோம்.. "பல முட்களுக்கு நடுவில் தான் அழகான ரோஜா பூக்கிறது".. குடும்ப வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அழகாக மாற்றுங்கள் பிறகு பாருங்கள் உங்கள் குடும்ப சந்தோஷத்தினை….201701121412164334 problems with family SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button