மருத்துவ குறிப்பு

பெண்களின் சிறுநீர் தொற்று தாம்பத்ய உறவைப் பாதிக்குமா?

உடல் ரீதியாக தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து வெளியில் சொல்வதற்கு பெரும்பாலும் பெண்கள் தயக்கம் காட்டுவார்கள். அப்படி ஒரு பிரச்னைதான், சிறுநீர்த்தொற்று. யூரினரி இன்ஃபெக்‌ஷன் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து, சிறுநீரக சிகிச்சை நிபுணர் நா. ஆனந்தனிடம் பேசினோம்.

”சிறுநீர்த் தொற்று என்பது, பெண்களுக்கு வர அதிகம் வாய்ப்புள்ள, ஆனால் அவர்கள் அலட்சியப்படுத்தும் ஓர் உடல்நலப் பிரச்னை. அதைப் பற்றிய மருத்துவ விழிப்பு உணர்வுத் தகவல்களைப் பார்ப்போம்.

அறிகுறிகள்

* சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்.
* அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
* சிறுநீர் சரியாகக் கழிக்க முடியாமல் வலி ஏற்படுவது.
* முழுமையாக சிறுநீர் கழித்த உணர்வின்மை.

காரணங்கள்:

* தேவையான நீர், நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளாதது.
* நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பது.
* நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு.
* அதிகக் காரமான உணவுகளை எடுத்துக் கொள்வது.
* சுகாதாரமற்ற கழிப்பறை சூழல் மற்றும் கழிவறைப் பழக்கம்.
* மலம் கழிக்கும்போது சரியாகச் சுத்தம் செய்யாதது.
* சரியாகச் சாப்பிடாததால் சுரக்கும் அமிலங்கள் சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்றை ஏற்படுத்துவது.
* காப்பர் – டி கருத்தடை சாதனம் பயன்படுத்தும் பெண்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புண்டாவது.
* கேன்சர், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களின் அறிகுறிகளாக இருக்கும் பட்சத்தில்.
* நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகரிப்பது.

u1 12322

தீர்வுகள்

* யூரினரி இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சோதனை, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* உடனடியாக ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது, இந்தப் பிரச்னையில் இருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம்.
* 4% முதல் 10% வரை பெண்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுவதால், அதைத் தவிர்க்கும் விதமாகவும், நோயின் அறிகுறிகள் தெரிந்தவுடனும் அதிகளவில் நீர் பருக வேண்டும்.
* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் மருத்துவரையின் பரிந்துரைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
* யூரினரி இன்ஃபெக்‌ஷன், ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போதே சரியாகிவிடும். ஆனால், அது வேறு சில நோய்களின் அறிகுறியாக இருக்கும் பட்சத்தில், ரத்தம், சீழ் கசிவதுடன் மயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி காரணத்தை துல்லியமாக அறியும் வண்ணம் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்துகொள்வது அவசியம்.
* புதிதாகத் திருமணமான பெண்களுக்கு தாம்பத்தியக் காரணத்தால் சிறுநீர்த் தொற்று ஏற்படலாம். இது இயல்பானது மற்றும் மாத்திரை, டானிக் என்று எளிய சிகிச்சையில் குணப்படுத்தக்கூடியது."

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button