தலைமுடி சிகிச்சை

நரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை !!

கருமையான கூந்தல் நிறம் போரடித்து போய் பல விதமான பிரவுன், லெசான சிவப்பு ஆகிய நிறங்களில் கூந்தல் இருப்பது பலருக்கும் பிடிக்கிறது. இதற்கு இயற்கையாக நிறங்களை தரும் டைக்களை உபயோகிப்பது சிறந்தது

அதே போல் நரை முடி இப்போது டீன் ஏஜ் வயதினருக்கும் வந்துவிட்டது நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது.

இதற்கு காரணங்கள் என்னவோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் வந்துவிட்டதே என்று செயற்கையான க்டைகளில் விற்கும் டைக்களை பயன்படுத்தாதீர்கள். அம்மோனியா கருமை மட்டும் தருவதில்லை. பல ஆபத்தான நோய்களையும் தருகிறது.

ஆனால் அம்மோனியா இல்லாமல் யாரும் டை செய்வதில்லை. ஆகவே கடைகளில் விற்பதை தவிர்த்துவிட்டு இயற்கையான டைக்களை நாடுங்கள்.

இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் அனைத்தும் நரை முடியின் தன்மையை இயற்கையாக குறைக்கச் செய்பவை. பயன்படுத்தி பாருங்கள்.

அவுரி எண்ணெய் : அவுரிப்பொடி நாட்டு மருந்துகளில் கிடைக்கும் அதனை வாங்கி நீரில் குழைத்து, சிறு வில்லைகளாகத் தட்டிக் காயவைத்து, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, காய்ச்சுங்கள். பின் ஆற வைத்து அந்த எண்ணெயை உபயோகிக்கலாம். இதனால் வெள்ளை முடி நாளடைவில் கருமையாக மாறும்.

வெற்றிலை மற்றும் மருதாணி: வெற்றிலை, பாக்கு, வெட்டிவேர், மருதாணி – இவை நான்கையும் அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவைத்து அலசவேண்டும். இதனால் கருமை பெறும்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறை தொடர்ந்து உபயோகிக்கும் போது வெள்ளை நிறம் மாறிவிடும். எலுமிச்சை சாறை தலையில் தேய்த்து கால் மணி நேரம் சூரிய வெளிச்சம் தலையில் படும்படி இருங்கள். அதன் பின் தலைக்கு குளித்தால் வெள்ளை நிறம் மட்டுப்படும்

சோற்றுக் கற்றாழை சோற்றுக் கற்றாழை ஜெல், ஹென்னா, டீ டிகாஷன் – இவை மூன்றையும் கலந்து 3 மணி நேரம் அப்படியே ஊர வையுங்கள். பின்னர் அதனை தலையில் த்டவி 1 மணி நேரம் கழித்து குளித்தால் நிறம் மாறும்.

செம்பருத்தி : செம்பருத்தி இதழ்களை நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடுங்கள். பின் ஆற வைத்து வடிகட்டி, அந்த நீரை தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து தலையை அலசினால், பிரவுன் நிறத்தில் கூந்தல் ஜொலிக்கும்.

வால் நட் : வால் நட் ஓடுகளை பொடி செய்து நீரில் கொதிக்க வையுங்கள். பின்னர் இந்த நீரை தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து கழுவவும். அடந்த பிரவுன் நிறத்தை தரும். இதை விட மிகச் சிறந்த கலரிங்க் செய்யும் இயற்கை டையை நீங்கள் பாக்க முடியாது. முயன்று பாருங்கள்.

பீட்ரூட் சாறு : பீட்ரூட் சாறு மற்றும் கருவேப்பிலை சாறு சம அளவு எடுத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். இதனால் உங்கல் கூந்தல் தங்க நிறத்தில் அழகாய் மின்னும்

27 1474950937 indigo

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button