அழகு குறிப்புகள்முகப்பரு

முகப் பரு நீக்க எளிய முறை

ld510முகத்தில் பருக்கள் என்பது உங்களது உணவு முறை, சுற்றுச் சூழல், தட்ப வெப்ப நிலையினால் ஏற்படுகிறது. வியர்வை, எண்ணைப் பசையினால் சரும துவாரங்கள் அடைபடலாம். அதனாலும் பருக்கள் வரக்கூடும். எனவே, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுதல் முக்கியம். நமது முக சருமத்திற்கு ஏற்ற அமிலத் தன்மை உடைய சிறந்த க்ளென்சர் (cleanser) உபயோகிக்க வேண்டும். நல்ல மாய்ஸ்சரைஸர் (moisturizer) சருமத்தின் ஈரப் பசை நீடிக்கச் செய்யும்.

சருமத்தில் உள்ள உலர்ந்த, செயலிழந்த செல்களை அவ்வப்போது நீக்க வேண்டும். நல்ல முகப் பூச்சு உபயோகிக்க வேண்டும். களிமண் பூச்சு, வேப்பிலைப் பூச்சு போன்றவற்றை ஆலிவ் எண்ணையுடன் கலந்து உபயோகிக்கலாம். இத்துடன் சரிவிகித உணவை உட்கொள்ளல் மிக முக்கியம். குறைந்தது தினமும் 1 லிருந்து 1 1/2 லிட்டர் வரை நீர் அருந்த வேண்டும். 

உணவில் சேர்க்க உகந்தவை:

• காய்கறி, பழங்கள் : தினமும் 5 முறை
• விதைகள் : சூரிய காந்தி விதை, பூசணி விதை, எள்ளு
• நார்ச் சத்து : முழு தானிய உணவு – ஓட்ஸ், கோதுமை
• புரதச் சத்து : பருப்பு, முளை கட்டிய பயறு
• பால் பொருட்கள் : ஆடை நீக்கிய பால், தயிர், சோயா பால்
• எண்ணை : மீன் எண்ணை, சூரிய காந்தி எண்ணை, ஆலிவ் எண்ணை, நல்லெண்ணை
• மாமிச உணவு : மீன், கோழி வாரத்தில் 3 முறை
• காப்பி, டீ : தினம் 2 முறை

தவிர்க்க வேண்டியவை:

• ஜாம், கேக், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகள், மைதா, பாஸ்தா போன்ற பதப்படுத்திய மாவு வகைகள், குளிர்பானங்கள், வறுக்கப்பட்டவை, வெண்ணை, க்ரீம், ஐஸ்க்ரீம்

முறையான உணவுகளும், சுத்தமான உடலும், தூய சுற்றுப்புறமும் உங்களைப் பருக்களிலிருந்து எட்டியே வைத்திருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button