மருத்துவ குறிப்பு

பற்கள் அசிங்கமாக இருப்பதற்கு உங்களது இந்த செயல்கள் தான் காரணம் என்பது தெரியுமா?

நாம் ஒவ்வொருவரும் மூன்று சூழ்நிலைகளில் தான் பற்களின் மீது கவனம் செலுத்துவோம். அதில் முதலாவதாக காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவது, இரண்டாவது கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போது, பற்கள் மஞ்சளாக இருப்பது, மூன்றாவதாக நண்பர்களுடன் பேசும் போது, அவர்கள் நீ பல் மருத்துவரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறும் போது போன்ற தருணங்களில் நமது பற்களைப் பற்றி கவனிப்போம்.

நாம் தினமும் பற்களைத் துலக்குகிறோம், பின் எப்படி பற்கள் மஞ்சளாக அசிங்கமாகும் என நீங்கள் கேட்கலாம். இதற்கு காரணம் அன்றாடம் நாம் செய்யும் ஒருசில செயல்கள் தான் காரணம். இங்கு அந்த செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.

முறையை மாற்றுங்கள் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவு உண்ட பின் பற்களைத் துலக்குவோம். முக்கியமாக இனிப்பு பொருட்களை உட்கொண்டதும் செய்வோம். ஆனால் அப்படி உணவு உண்டதும் பற்களைத் துலக்கினால், பற்களின் எனாமலைப் பாதுகாக்கும் பாதுகாப்பு படலம் நீக்கப்பட்டு, பற்களின் இயற்கையான நிறம் மாறி, பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எனவே இனிமேல் அப்படி செய்யாமல், உணவு உண்ட 1-2 மணிநேரத்திற்குப் பின் பற்களைத் துலக்குங்கள்.

டூத் பிரஷை மாற்ற மறப்பது தினமும் 2 வேளை பற்களைத் துலக்குவதால், டூத் பிரஷில் கிருமிகளின் தேக்கம் அதிகம் இருக்கும். எனவே என்ன தான் டூத் பிரஷ் புதிது போன்று காணப்பட்டாலும், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்றிவிடுங்கள்.

அதிகமான இனிப்பு வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கத்தை அதிகரிக்கும் இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம், பற்களில் அமிலம் உற்பத்தி செய்யப்பட்ட பற்களின் எனாமல் பாதிக்கப்பட்டு, சொத்தைப் பற்கள் வர ஆரம்பிக்கும்.

மௌத் வாஷ் நீங்கள் மௌத் வாஷை அதிகம் பயன்படுத்தினால், அது பற்களைப் பாதுகாக்க டூத் பேஸ்ட்டில் இருக்கும் ஃபுளூரைடை வெளியேற்றிவிடும். இதனால் எளிதில் பற்கள் பாழாகும். எனவே மௌத் வாஷை உணவு உட்கொண்ட 2 மணிநேரத்திற்கு பின் பயன்படுத்துங்கள்.

பற்களை முறையாக சுத்தம் செய்யாதது பலரும் பற்களை வெறும் டூத் பிரஷ் கொண்டே சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் பற்களின் இடுக்குகளில் உணவுத் துகள்கள் சிக்கிக் கொண்டு, அதுவே பற்களில் பாக்டீரியாக்களை பெருக்கி, சொத்தை பற்களை உருவாக்கும். எனவே பிரஷ் செய்த பின் மறவாமல் ப்ளாஷிங் செய்யுங்கள்.

25 1477376215 5 floss

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button