மருத்துவ குறிப்பு

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு…

குழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன், முத்தம் கொடுப்பது அணைத்துக் கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களை வழி அனுப்பி வையுங்கள்.

புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைக்கு…
புதிதாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சிறிது காலத்துக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயமாகவே தோன்றும். பெற்றோரை விட்டு பிரிந்து புது இடத்தில், சில மணி நேரங்களுக்கு இருப்பது என்பதை, அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.

பள்ளியை பற்றிய உங்களின் வார்த்தைகள், மிகவும், பாசிடிவ்வாக இருக்கட்டும். நீ விரும்பிற விஷயங்கள் எல்லாம் பள்ளியில் இருக்கு; சந்தோஷமாக பள்ளிக்கு போ, அங்கே இருக்கிற எல்லாரும் உன்னோட நண்பர்களே… என்கிற ரீதியில் பேச வேண்டும்.

அம்மா சொல்லும் எந்த ஒரு விஷயமும், உண்மையாகத்தான் இருக்கும்.. என்று குழந்தைகள் நினைப்பார்கள். அத்துடன் ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும்? என்பது போன்ற கேள்விகளை, குழந்தைகள் கேட்க ஆரம்பிக்கும். இதுபோன்ற புரியும் வகையில் தெளிவாக சொல்லுங்கள்.

பள்ளி செல்வதற்கு முதல் நாள் இரவு நேரத்தோடு தூங்க வைப்பதுடன், மறுநாள் காலை, சரியான நேரத்துக்கு எழுப்பி, குழந்தையை பள்ளிக்கு தயார் செய்வதை, தினசரி வேலையாக கொள்ளுங்கள். தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் என்றால். குழந்தைக்கும், கடவுள் வழிபாடு போன்ற விஷயங்களை சொல்லிக் கொடுங்கள்; இது அவர்களது தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

குழந்தையை பள்ளிக்குள் அனுப்புவதற்கு முன், முத்தம் கொடுப்பது அணைத்துக் கொள்வது, டாட்டா காட்டுவது என்று அவர்களை வழி அனுப்பி வையுங்கள் ஆனால் குட்பை சொன்ன பின், குழந்தையிடமே நின்று கொண்டு இருக்காமல் பள்ளியை விட்டு வந்து விடுங்கள். அப்போது தான், குழந்தை புது சூழ்நிலையை சகஜமாக எடுத்துக் கொள்ளும் அதனால், சில விஷயங்களை அவர்களே, கையாள தேவையான இடைவெளியை, சிறிது கொடுத்து தான் பார்ப்போம்.201702171358362702 child first day going to the school SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button