தலைமுடி சிகிச்சை

சும்மா தலைக்கு குளிச்சா என்ன ஆகும் தெரியுமா ?

உங்கள் தலை முடியை அலசுவது ஒரு பாதுகாப்பான வழி என்று நீங்கள் கருதுகிறீர்களா? ஆனால் அடிக்கடி அதை செய்வதனால் உங்கள் முடிக்கு என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா?

தலை முடியை அடிக்கடி அலசுவதால் என்னென்ன கேடுகள் நிகழும் என்பதை நாம் இப்போது பார்க்கலாம்.

பலர் அடிக்கடி தங்கள் தலை முடியை அலச வேண்டிய சூழ்நிலை அதுவும் தொடர்ந்து உருவாகலாம். இதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். சில நேரங்களில் இது வானிலையால் முடி மிகவும் பிசுபிசுப்பாக எண்ணெய் பசையுடன் காணப்படுவதால் அதை அலசவேண்டியிருக்கும்.

சில நேரங்களில் புத்துணர்வாக இருக்கவும் தலைக்கு குளிப்பதுண்டு. காரணம் எதுவானாலும் அடிக்கடி முடியை அலசுவதை குறிப்பாக தினமும் செய்வதை தவிர்த்திடுங்கள். இது பார்க்க எந்த விளைவையும் ஏற்படுத்தாத சாதாரண செயல் போல தோன்றினாலும் அது முடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இதில் கொடுமை என்னவென்றால் உங்கள் முடி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது கூட உங்களுக்குத் தெரிவதில்லை. எனவே அடிக்கடி முடியை அலசுவதால் என்ன நிகழும் என்பதை அறிய மேலே படியுங்கள்.

1. முடி உதிர்வு: ஆம், அதிகம் முடியை அலசுவதால் உங்கள் முடியை அதிகம் உதிரச்செய்யும். ஏனென்றால் ஈரமான முடியின் வேர்க்கால்கள் மிகவும் பலவீனமாக இருப்பதால் உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

2. வறண்ட முடி: அடிக்கடி முடி அலசுவது உங்கள் முடியின் எண்ணெய் பசையைக் குறைத்து அதனை வறட்சியாக்கும். உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய்ப்பசை அவசியம்.

3. முடிப்பிளவு: எண்ணெய் பசை குறைந்தால் முடியின் நுனிகளில் பிளவு ஏற்படும். எனவே தினமும் தலையை அலசுவதை தவிருங்கள்.

4. பொடுகு: ஆம். முடியை அடிக்கடி அலசுவதால் சரும வறட்சி ஏற்பட்டு பொடுகு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது தேவையா?

5. தலை அரிப்பு: அதிகம் தலையை அலசுவதால் சரும ஈரப்பதம் குறைந்து தலை அரிப்பை ஏற்படுத்தும்.

6. முடி உடைத்தல் :அதிகம் முடியை அலசுவதால் முடி இழுவை ஏற்படலாம் அல்லது பலவீனமடையலாம். இதனால் முடியின் நடுப்பகுதியில் உடைந்து விட வாய்ப்புண்டு. இதை தவிர்க்கவும் நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிருங்கள்.

7. பரட்டை முடி: உங்கள் முடிக்கு ஈரப்பதம் தேவை. மிக அதிக அல்லது மிகக் குறைந்த ஈரப்பதம் முடியை பரட்டையாக படியாமல் செய்வதோடு பார்ப்பதற்கு சகிக்க முடியாத ஒன்றாக இருக்கும். எனவே ஒரு வாரத்தில் இருமுறை மட்டுமே தலையை அலசுங்கள்.

whathappenswhenyouwashyourhairtoooften 06 1478423879

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button