சரும பராமரிப்பு

இயற்கை முறையில் பெண்கள் சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள்

சருமத்தை பாதுகாப்பதில் இயற்கையான மூலிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்று பெண்கள் வீட்டில் உள்ள மூலிகைகள் கொண்டு எப்படி அழகை மேம்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

இயற்கை முறையில் பெண்கள் சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள்
நமது நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் முந்தைய நாளில் இயற்கையான மூலிகைகள், இலைகள் கொண்டே தங்கள் அழகை மேம்படுத்தி வந்தனர். முக அழகிற்கும், சரும பாதுகாப்பிற்கும் என வேப்பிலை, குங்குமப்பூ, மஞ்சள், சந்தனம், துளசி, தயிர், முல்தானி மட்டி, கடலை பருப்பு, தேன், நெல்லிக்காய் போன்றவை பயன்படுத்தப்பட்டன. இவை முற்றிலும் சருமத்தை பாதுகாப்பதுடன், சருமத்தை போஷிக்கவும் செய்யும். பெண்கள் வீட்டில் இம்மூலிகைகள் கொண்டு அழகை மேம்படுத்த சில குறிப்புகள்…

முக வறட்சியை போக்கும் வேப்பிலை…

வறண்ட சருமங்களை புதுப்பிக்க வேப்பிலை பவுடர் கொஞ்சம் எடுத்து அதனுடன் திராட்சை சாறு கலந்து முகம் முழுவதும் பூசி விடவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வறண்ட சருமம் பளபளப்புடன் திகழும். அதுபோல் முகப்பரு உள்ளவர்கள் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை நனைத்து பரு மீது தடவி வர பருக்கள் காணாமல் போய்விடும்.

சிகப்பழகை தரும் குங்குமம்ப்பூ:

கொஞ்சம் பன்னீரில் குங்குமப்பூவை போட்டு நன்கு ஊற வைத்து அந்த தண்ணீரை முகத்தில் தடவி வர முக கருமை குறைந்து சிகப்பழகு பெறும். கரும்புள்ளிகள் மறைய குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து பூசி வர கரும்புள்ளி காணாமல் போய் விடும். அதுபோல் குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து அதனுடன் கொஞ்சம் சந்தன தூளை கலந்து குழைத்து முகத்தில் பூசினால் முகம் பளபளப்புடன் திகழும்.

சருமத்தை பளிச்சிட வைக்கும் சந்தனம்:

அரைத்த சந்தன விழுதுடன் நன்கு தூள் செய்யப்பட்ட பாதாம் பவுடரை கலந்து அதனுடன் பால் சேர்த்து முகம் மற்றும் கைப்பகுதிகளில் பூசினால் சருமம் பளிச்சென இருக்கும்.201703081219425941 Some tips to natural beauty of the women skin SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button