ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே! உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ அதை தடுக்க சில டிப்ஸ்…

09 1436419936 7 water
பெரும்பாலானோர் சந்திக்கும் மிகப்பெரிய ஒரு தர்மசங்கடமான ஓர் நிலை தான் வாய் துர்நாற்றம். இப்பிரச்சனை உள்ளவர்களால் மற்றவர்களுடன் நிம்மதியாக பேச முடியாது. யாருடனும் சகஜமாக பழக முடியாது. தங்கள் மீது ஓர் அசெளகரிய உணர்வை உணர்வார்கள். அதில் குறிப்பாக ஆண்கள் இப்பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

இதற்கு அவர்களின் முறையற்ற பராமரிப்பு தான் காரணம். பொதுவாக பெண்கள் தங்கள் அழகின் மீது அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். ஆனால் ஆண்களோ, இயற்கை அழகு ஒன்றே போதும் என்று இருப்பார்கள். ஆனால் தற்போது கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட உணவுப் பொருட்களால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, வாயின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.

மேலும் ஆண்கள் தான் வெளியிடங்களில் அதிகமாக சாப்பிடுவார்கள். எனவே தான் இவர்கள் வாய் துர்நாற்ற பிரச்சனையால் கஷ்டப்படுகிறார்கள். இப்பிரச்சனையை தவிர்க்க என்ன வழி என்று கேட்கிறீர்களா? அதற்கு கண்ட உணவுகள் உட்கொள்வதைத் தவிர்ப்பதோடு, ஒருசில சமையலறைப் பொருட்களைக் கொண்டு வாய் துர்நாற்றத்தைப் போக்கலாம். சரி, இப்போது வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போமா!!!

புதினா இலைகள்

புதினா இலைகள் வாய் துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருட்களில் மிகவும் சிறந்தது. புதினா வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, துர்நாற்றத்தையும் போக்கும். இதற்கு அதில் உள்ள குளோரோபில் தான் முக்கிய காரணம். எனவே அவ்வப்போது புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள்.

உப்பு நீர்

வாய் துர்நாற்றம் அதிகம் உள்ள ஆண்கள் எந்த ஒரு உணவை உட்கொண்ட பின்னரும் உப்பு நீரினால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் உப்பு நீரானது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் உணவுத்துகள்களை முற்றிலும் பல்லிடுக்குகளில் இருந்து முற்றிலும் வெளியேற்றிவிடும். இல்லாவிட்டால், தினமும் காலை மற்றும் இரவில் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைடு, வாயில் உள்ள அமிலத்தை நீர்க்கச் செய்துவிடும். ஏனெனில் வாயில் உள்ள அமிலமானது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும். எனவே பேக்கிங் சோடாவை ஈரமான டூத் பிரஷ்ஷில் தொட்டு, பற்களை துலக்கினால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களும் பளிச்சென்று மின்னும்.

ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாயில் தங்கியுள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, வாய் துர்நாற்றம் நீங்கும். எனவே வாய் துர்நாற்றம் அதிகம் உள்ள ஆண்கள் மட்டுமின்றி பெண்களும், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வருவது நல்லது.

தயிர்

தயிர் கூட வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். நீங்கள் வாய் துர்நாற்றத்தினால் அதிகம் கஷ்டப்படுபவர்களாக இருந்தால், தொடர்ந்து ஆறு வாரங்கள் தயிரை சாப்பிட்டு வாருங்கள். பின் அதன் பலன் தெரியும்.

வைட்டமின் சி

வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் கேரட் பேன்றவற்றை உட்கொண்டு வாருங்கள்.

தண்ணீர் குடிக்கவும்

வாய் வறட்சியுடன் இருந்தால், பாக்டீரியாக்கள் நன்கு வளரும். எனவே தொடர்ந்து தண்ணீர் குடித்தவாறு இருங்கள். இதனால் வாய் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, வாயில் இருக்கும் உணவுத்துகள்கள் அனைத்தும் வெளியேற்றப்படும். எனவே தினமும் தவறாமல் 8 டம்ளர் தண்ணீரைக் குடித்து வாருங்கள்.

வேப்பிலை

வேப்பிலையின் மருத்துவ குணத்தை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஏனெனில் அந்த அளவில் அது ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே வாய் துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள், தினமும் சிறிது வேப்பிலையை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்குங்கள். இதனால் வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஈறுகளும் வலிமையடையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button