உதடு பராமரிப்பு

கருப்பான உதடா? அல்லது குளிரில் கருக்கிறதா? விளக்கெண்ணெய் எப்படி உதவும் தெரியுமா?

விளக்கெண்ணெய் நமது பாட்டி காலத்திலிருந்து உபயோகப்படுத்துகிறோம். ஆலிவ் , தேங்காய் எண்ணெய் போல் விளக்கெண்ணெயும் அழகை அதிகரிக்கச் செய்யும்.

கூந்தலுக்கு மட்டுமன்றி உங்கள் சருமத்தின் பிரச்சனைகளையும் போக்குகிறது.விளக்கெண்ணெய் கொண்டு எப்படி உங்களை அழகு படுத்தலாம் என்று அழகு ஆலோசகர் சொல்வதை கேளுங்கள்.

உதடு கருமையை தவிர்க்க : உதடு கருமையை போக்க வேண்டுமென்றால் விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேயுங்கள். வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

க்ளென்ஸர் :
உங்களுக்கு தெரியுமா? விளக்கெண்ணெய் அழுக்கை அகற்றும். சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும். விளக்கெண்ணெயால் சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

அடர்த்தியான புருவம் கிடைக்க : தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து பாருங்கள். அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்.

சுருக்கங்கள் மறைய : சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்து பாருங்கள். இளமையான சருமம் கிடைக்கும்.

கருவளையம் போக : ஒரு உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வையுங்கள். உருளையின் பண்புகள் கலந்த எண்ணெய் உங்கள் கண்களில் மாயாஜாலம் செய்து கருவளையத்தை காணாமல் போக வைக்கும்.

கரும்புள்ளை மறைய :
விளக்கெண்ணெயுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவவும். வாரம் 3 நாட்கள் செய்து பாருங்கள். சுத்தமான சருமம் உங்களுக்கு கிடைக்கும்.16 1479293891 lips

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button