கை பராமரிப்பு

விரல்களின் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்

முகத்திற்கு எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ அதே அக்கறையை கைக்கும் காட்ட வேண்டியது மிக அவசியம். இப்போது விரல்களின் கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகளை பார்க்கலாம்.

விரல்களின் கருமையை போக்கும் வீட்டு வைத்தியம்
ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவளது கைகள் மட்டும் கருத்து இருந்தால் அது அசிங்கமாகத் தெரியும். முகத்திற்கு எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ அதே அக்கறையை கைக்கும் காட்ட வேண்டியது மிக அவசியம்.

கைகள் கருத்து போவதற்கான காரணம் – அதிகப் படியான சூரிய வெளிச்சம், ஹார்மோன் மாற்றங்கள், உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிப்பது, இறந்த இரத்த செல்கள் அதிகமாக உடலில் சேர்வது. இவையெல்லாம் தான் கைகள் கருப்பாக மாறுவதற்கான காரணங்கள். இப்பொழுது கருப்பான விரல்களை சரி செய்வதற்கான எளிய சிகிச்சை முறைகளைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

சிறிது சர்க்க்ரையுடன் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கலந்து அதனை விரல்களின் மேல் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதனை வெதுவெதுப்பான நீரினால் கழுவி விடுங்கள். அல்லது பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து அதன் மீது சர்க்கரையைத் தூவி அப்படியே கைகளின் மீதும் தேய்க்கலாம். இது சிறந்த பலன் அளிக்கும்.

201703221222398208 home remedies for dark knuckle SECVPF

கருத்த விரல்களுக்கு கடலை மாவு ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். 3 ஸ்பூன் கடவை மாவு, 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் 1 ஸ்பூன் பால், அவை அனைத்தையும் கலந்து விரல்களின் மீது மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை செய்து வந்தால் கருத்த நிறம் விரைவில் சரியாகும்.

வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு – 1, தேன் – 2 ஸ்பூன், பால் – 2 ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1 ஸ்பூன். இவை அனைத்தயும் ஒன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். அதனை விரல்களின் மீது தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை இதை செய்து வந்தால் சீக்கிரமே நல்ல முன்னேற்றம் தெரியும்.

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கின்னத்தில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் முட்டை வெள்ளைக் கரு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை கைகளின் மீது போட வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தை உரித்து சூரிய வெளிச்சத்தில் சில நாட்கள் உலர வைக்க வேண்டும். உலர்ந்த பழத்தை நன்கு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 3 ஸ்பூன் ஆரஞ்சு பொடியுடன் சிறிது பால், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை கருத்தத் தோலின் மீது போட வேண்டும். இதனால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button