பழரச வகைகள்

பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி

மாங்காய் என்றாலே நாவில் எச்சில் ஊறுவது போல உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இத்தகைய பச்சை மாங்காய் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்போம்.

பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

பச்சை மாங்காய் – 1
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
தேன் – 5 டீஸ்பூன்
ஐஸ்கட்டி – 5
தண்ணீர் – 2 கப்

செய்முறை :

* மாங்காய் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

* நறுக்கிய மாங்காயை 2 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

* மிக்சியில் சீரகத்தூள், மிளகு தூள், தேன், உப்பு, புதினா, ஐஸ் தண்ணீர், ஐஸ் கட்டி சேர்த்து ஒன்றாக நன்கு கலந்து கொள்ளவும்.

* இந்த ஜூஸை ஒரு கிளாஸில் ஊற்றி ஜில்லென பருகலாம்.

* பச்சை மாங்காய் ஜூஸ் ரெடி!201703251026079576 how to make raw mango juice SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button