மருத்துவ குறிப்பு

நாப்கின் பயன்படுத்தும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

பெண்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயது வரை மாதவிடாய் என்ற அனுபவத்தை உணர்ந்தே ஆக வேண்டும். மாதவிடாய் குறித்து பேசுவதே அருவருப்பு என்ற இருந்த காலம் மாறி தற்போது பெண்கள் அனைவருக்கு இதுகுறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டுள்ளது.


1488910355 853
ஆனால் அதே நேரத்தில் மாதவிடாய் காலத்தின்போது பயன்படுத்தும் நாப்கின்கள் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடமும் இருக்கின்றதா என்பது சந்தேகமே.

மாதவிடாய் நாட்களில், நாப்கின் பயன்படுத்தும்போது பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

1. நாப்கின்களை வாங்கும்போது இரசாயனமற்ற நாப்கின்களை வாங்குவது நல்லது. ஏனெனில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உண்டு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன

2. ஏற்கனவே பயன்படுத்திய நாப்கினை நீக்கி விட்டு, புதிய நாப்கின்களை கைகளைக் கழுவாமல், அதே கைகளால் எடுத்து பயன்படுத்த கூடாது. நாப்கினை நீக்கியவுடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவிய பின்னர் புதிய நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் பிறப்புறுப்புகளில் அரிப்பு, அலர்ஜியை ஏற்படுத்தும்.

3. நாப்கின்களை ஐந்துமணி நேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். ஏனெனில் நாப்கின்களில் உதிரப் போக்கு அதிகமாக இல்லாது இருந்தாலும் அதிக நேரம் பயன்படுத்துவதால் நாப்கின்களில் உருவாகும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஒவ்வாமை ஏற்படும்

4. பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எந்த காரணத்தை கொண்டு கழிவறையில் போட்டு தண்ணீரை பிளஷ் செய்ய கூடாது. இதனால் மற்றவர்கள் கழிவறையை பயன்படுத்தும்போது தொற்று நோய் ஏற்படுவதை தவிர்க்கலம்.

5. அதேபோல்பயன்படுத்திய நாப்கினை இரண்டு மூன்று பேப்பர்களில் சுற்றி குப்பைத்தொட்டியில் போடலாம். அப்படி நாப்கின்கள் போடும் குப்பைதொட்டியை அன்றே வீட்டை விட்டு அப்புறப்படுத்திவிடுங்கள்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button