அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சரும பராமரிப்பில் விளக்கெண்ணை

4விளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று. எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும்.

• தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும்.

• விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம்.

• குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும்.

• கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும்.

• வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.

• இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதம் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம்.

• சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.

Related posts

இதோ டிப்ஸ்.!!முகம் அழகாகவும், உடல் பளபளப்பாகவும் வீட்டிலேயே பெற.!

nathan

உப்பிய கண்கள் வயதான தோற்றத்தை தருகிறதா? இதை முயன்று பாருங்கள்!!

nathan

கண்ணழகையே கெடுத்து விடும் கருவளையம்…..

sangika

சன்ஸ்க்ரீன் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை

nathan

கழுத்து கருமை நீங்க எளிய இயற்கை குறிப்புகள்

nathan

அழகிய மிருதுவான பாதத்தைப் பெறுவதற்கு…

sangika

பூசணிக்காயை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது

nathan

சர்க்கரையை கொண்டே சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற முடியும்.

nathan

வலைத்தளத்தில் பரவும் இளம் நடிகையின் ஆ பாச வீடி யோ

nathan