முகப்பரு

மார்பு மருக்களால் அவதியுறுகிறீர்களா? இதோ வீட்டு வைத்தியம்!

மருக்கள் மார்பிலுள்ள முடியின் துவாரங்கள் இறந்த செல்களால் அல்லது எண்ணெயால் அடைபட்டுப் போய் பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படுவதால் தோன்றுகின்றன. மார்பில் அதிக அளவு எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால் உடலின் மற்ற பகுதிகளை விட இங்கே மருக்கள் தோன்றுவதற்கு அதிகம் வாய்ப்புள்ளது

சிவந்து போதல், வீக்கம், தொற்றுக்கள், இரணம் ஆகியவை மார்பு மருக்கள் அறிகுறிகளாகும். ஹார்மோன் மாறுபாடுகள், ஆரோக்கியக் குறைவான உணவு, மன அழுத்தம், அளவுக்கு மீறிய புகைப் பழக்கம் மற்றும் மது அருந்துதல் மற்றும் அதிக அளவு அழகுப் பொருட்கள் பயன்பாடு ஆகியவை மார்பு மறுக்கலுக்கு காரணமாக இருக்கலாம்.

அதேவேளையில் இதை சரிசெய்ய சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அதில் ஆறு செயல் முறைகளை உங்களுக்கு இங்கே தந்திருக்கிறோம்:

1. எலுமிச்சை : எலுமிச்சைப் பழத்துண்டை பாதிக்கப்பட்ட இடத்தில் நேரடியாக தேய்க்கலாம் அல்லது ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம். மிகவும் உணர்வு மிகுந்த (சென்சிட்டிவான) சருமம் கொண்டவர்கள் இதைத் தவிர்க்கவும்.

2. டூத் பேஸ்ட்: பற்பசை அல்லது டூத்பேஸ்ட்டை மருக்களை போக்க பயன்படுத்துவது ஒரு நல்ல வழி. இதில் உள்ள கிருமிகளைக் கொல்லும் இயல்புகள் பாக்டீரியாக்களைக் கொன்று எண்ணெய் சுரப்பிகளின் அதிக சுரப்பால் உருவான மருக்களை வற்றச்செய்துவிடும். இரவு உறங்கச் செல்லும் முன் பாதிக்கப்பட்ட பகுதியில் சற்று டூத் பேஸ்டை தடவி காலை எழுந்தவுடன் அதை தண்ணீரில் கழுவி விடவும். பலன்கள் கிடைக்கும் வரை தொடர்ந்து இதை செய்துவரவும்.

3. ஆப்பிள் சிடர் வினிகர்: ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள ஆல்பா ஹைடிராக்சில் அமிலங்கள் சருமத் துவாரங்களை சுத்தம் செய்து இறந்த செல்களை நீக்கக் கூடியவை இது மருவை விரைவாக வற்றைச் செய்துவிடும். தண்ணீர் கொஞ்சமும் அதில் சரிபாதி ஆப்பிள் சிடர் வினிகரும் எடுத்து கலந்துகொள்ளவும். அதில் ஒரு பஞ்சுருண்டையை முக்கி உடலில் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும். ஆப்பிள் சிடர் வினிகரை நீங்கள் கிறீன் டீ, சர்க்கரை மற்றும் தென் சேர்ந்த கலவையாகவும் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறை இதை பயன்படுத்தவும்.

4. கற்றாழை கற்றாழை மருக்களை காயவைக்கும் ஆந்த்ராகினான் எனப்படும் வேதிப்பொருளையும் பிளேவனாய்டுகளையும் கொண்டுள்ளது. இது மருவினால் அரிப்பையும் வலியையும் குறைக்கவல்லது. இதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் தேய்த்துவிட்டால் அது ஆழ்ந்து சருமத்திற்குள்ள செல்லும். அதை அப்படியே ஆறவிடவேண்டும். ஒரு நாளைக்கு இருமுறை மருக்கள் முற்றிலும் மறையும் வரை இதை செய்துவாருங்கள்.

5. சமையல் சோடா: ஒரு அருமையான சருமத்தூய்மைப் பொருளான இது இறந்த சரும செல்களை நீக்கி மென்மையான சருமத்தை தரும். ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து பசை போன்று செய்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும்.

6. மஞ்சள் : மருக்களை கட்டுப்படுத்த இது ஒரு அற்புதமான மருந்து. இதில் உள்ள கிருமிநாசினி குணங்கள் மற்றும் இரணத்தை ஆற்றும் இயல்பு மருக்களால் ஏற்படும் ரணங்களை ஆற்றும். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை ரோஸ் வாட்டரில் கலந்து கூழாக செய்து அதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவுங்கள். அது உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்

chestacne 06 1481002859

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button