ஆரோக்கியம் குறிப்புகள்

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?

தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா என்பதை பற்றி பார்க்கலாம்.

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்தலாமா?
தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சோப் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றுக்கொள்வது இல்லை.

ஒரே சோப்பை குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்படுத்துவது சரியல்ல. ஒருவரிடம் இருக்கும் சருமப் பிரச்சனை மற்றொருவருக்குப் பரவும் வாய்ப்பை சோப் ஏற்படுத்திவிடும். ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்துவது சுகாதாரமானது கிடையாது.

201704081342565253 Everyone in the family can use the same soap SECVPF

ஒவ்வொருவரின் சருமம், வெவ்வேறு வகையைச் சார்ந்ததாக இருக்கும். தன்னுடைய சருமத்துக்கு எது பொருந்தும் என்பதை சரும மருத்துவரிடம் கேட்ட பிறகு சோப்பைத் தேர்ந்தெடுக்கலாம். சிலருக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியும். இவர்கள் சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதுவும் பி.ஹெச் அளவு 5.5 இருக்கிற சோப்பாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

கட்டுப்படுத்த முடியாத எண்ணெய்ப் பசை சருமத்துக்கு அதற்கேற்ற பிரத்யேக சோப் பயன்படுத்தலாம். ஆனால், அதையும் ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button