மருத்துவ குறிப்பு

வயோதிகத்தின் வாசல் கண்களை கவனியுங்கள்!

மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி தான் நமது கண்கள். கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்து விடுகின்றன.

திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, நேரத்துக்கு சரியாக சாப்பிடாமல் இருப்பது, சத்து குறைபாடு, தரமில்லாத மேக்அப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.

கருவளையம் மற்றும் சுருக்கம்: கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல், சிவந்து போதல், வீக்கம், தூக்கமின்மை இவைதான் கண்ணில் வரும் கருவளையத்துக்கு மிக முக்கியக் காரணங்கள். பகல் தூக்கத்தைக் காட்டிலும், இரவு எட்டு மணி நேர தூக்கம் அவசியம். பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை எடுத்து, கண்களுக்குக் கீழே தடவலாம். வெள்ளரிக்காயை நறுக்கி, மூடிய கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுப்பதால், கண்களின் சோர்வு நீங்கி, குளிர்ச்சி அடைந்து கருவளையங்கள் மறையும்.
பன்னீரை பஞ்சில் தேய்த்து, இரவு தூங்கும்போது கண் இமை மீது வைத்துக்கொள்வதால் கருமை நீங்கி, கண்கள் பளிச்சென்று இருக்கும். கண்ணின் கீழே அதிக சுருக்கம் இருப்பதாக நினைப்பவர்கள், ஐலைனர் உடன், கீழ் இமையில் பென்சிலும் உபயோகித்தால் சுருக்கங்கள் தெரியாமல் இருக்கும்.
இமை: விளக்கெண்ணெய் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அகில் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து கண்களின் மேல் போட்டு வர, வறட்சி நீங்கி, இமை மற்றும் புருவத்திலும் முடி நன்றாக வளரும்.
புருவம்: கண்களின் அழகை அம்சமாகக் காட்டுவது புருவங்கள்தான். சிலருக்குப் புருவத்தில் முடியே இருக்காது. நிறமும் குறைவாக இருக்கும். தினமும் கரிசலாங்கண்ணி, விளக்கெண்ணெயைத் தலா, ஐந்து சொட்டுகள் எடுத்து, சூடு செய்து, நெல் உமித் தூளை ஒரு, ஸ்பூன் கலந்து, புருவத்தில் மசாஜ் செய்யலாம். அரை மணி நேரத்துக்குப் பின், வெதுவெதுப்பான நீரில் துடைத்துவிட வேண்டும். வாரம் மூன்று முறை இப்படிச் செய்வதால் புருவத்தில் முடி கருகருவென வளரும்.
மசாஜ்: கண்களுக்குக் கீழும், புருவங்களுக்கு மேலும் வட்ட வடிவில், மசாஜ் செய்தால், அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, கண்களின் கீழ் உள்ள கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைவதுடன், சோர்வு, நீங்கிப் புத்துணர்வு கிடைக்கும். கண்களுக்கு முன் கட்டை விரலை வைத்து அருகிலும், தொலைவிலும் விரலை நகர்த்தி மாற்றி மாற்றிப் பார்க்க வேண்டும். இதுபோல் தினமும், 15 முறை செய்ய வேண்டும். கண்களில் புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். கண்களை மூடி இருட்டை உணர்வதன் மூலம் கண்களுக்கு நல்ல பயிற்சி அளிக்க முடியும்.
உணவு: கண்ணில் உள்ள விழி வெண் படலம் (கார்னியா), விழித்திரை நன்றாகச் செயல்படுவதற்கு வைட்டமின் ‘ஏ’ அவசியம். வைட்டமின் ‘ஏ’ நிறைந்த காரட், முருங்கைக்கீரை போன்ற கீரை வகைகள், மீன், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால் ஆகியன கண்ணுக்கு மிகவும் நல்லது.67607 thumb

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button