சரும பராமரிப்பு

ஸ்ட்ரெச் மார்க்கை சுலபமா போக்கும் 2 வழிகள்!!

ஸ்ட்ரெச் மார்க் சரும அழகை கெடுக்கும். உடல் பருமனாக இருந்து மெலியும்போது சருமத்தில் தங்கிய கொழுப்பு செல்கள் உடைவதால் உண்டாகும் தழும்பே வரிவரியாக காணப்படும்.

அதுவும் பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு வயிற்றுபகுதியில் அழகை கெடுப்பது போல் அசிங்கமாக இருக்கும்.

இந்த தழும்பு அவ்வளவு எளிதில் போகாது. ஆனால் சருமத்திற்கு ஊட்டம் அளித்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அந்த தழும்பை ஓரளவு மறையச் செய்யலாம் என்பது பலரின் அனுபவ உண்மையாகும். அவ்வாறான குறிப்பு இதனை பாருங்கள்.

தேவையானவை : ஆளி விதை எண்ணெய் ரோஸ் ஹிப் எண்ணெய் பாடி லோஷன்

ரோஸ் ஹிப் எண்ணெய் என்பது ஒருவகை ரோஜா செடியில் காய்க்கும் பழமாகும். அதிலிருந்து பெறப்படும் எண்ண்ய்தான் ரோஸ் ஹிப் எண்ணெய். இந்த எண்ணெய் பல அழகு சாதன கடைகளில் கிடைக்கும்.

செய்முறை : 1முதலில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் போடும் பாடி லோஷனை சிறிது எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனை நன்றாக கலக்கி அதில் 1 ஸ்பூன் ஆளி எண்ணெயை ஊற்றவும். நன்றாக அந்த கலவையை அடித்தால் தயிர் போல் மாறும்.

அதில் ரோஸ் ஹிப் எண்ணெயை 10 துளி விட்டு கலந்தால் கெட்டியான பதத்திற்கு மாறும். இந்த கலவையை சருமத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இது ஆழமாக ஊடுருவி, செயல் புரியும்.

குறிப்பு : உங்களுக்கு மிகவும் சென்ஸிடிவான சருமமாக இருந்தால் சரும பரிசோதனை செய்தபின் உபயோகிக்கலாம்.

02 1480677971 massage

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button