மருத்துவ குறிப்பு

உடற்பருமன் சுட்டெண் (body mass index)

உடற்பருமன் சுட்டெண், ஒருவருடைய உடல் நிறையானது அவருடைய உயரத்திற்கு ஏற்ப எவ்வாறு அமைந்துள்ளது என்பதை உத்தேச அளவில் குறிக்கும் ஒரு சுட்டெண் ஆகும். இது ஒருவரின் உடல் நிறையை (Kg) அவரின் உயரத்தின் வர்க்கத்தால் (m2) வகுத்து கணிக்கப்பட வேண்டும்.

உ.ப.சு ஸ்ரீ நிறை (Kg)/உயரம் (m2)

உ.ப.சு இனை கணிப்பதன் ஊடாக ஒருவருடைய உடலில் எவ்வளவு நிறை தேவையான அளவை விட அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும், என்பதோடு ஒத்த வயதுடைய ஏனையவர்களுடனும் அதனை ஒப்பிட்டு பார்க்க கூடியதாக இருக்கும்.

உ.ப.சு ஊடாக ஒருவருடைய உடலில் உள்ள கொழுப்பின் அளவினை நேரடியாக கணிக்க முடியாது. ஆனால் உடலில் தேவையற்ற அளவில் அதிகப்படியான கொழுப்பு உள்ளதை அறிந்து கொள்ள முடியும். உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதா என்பதை பின்வரும் அட்டவணையுடன் ஒப்பிட்டு அறிந்து கொள்ளமுடியும்.

<18 under weight (குறைவான எடை)
18.5 – 22.9 Normal weight (ஆரோக்கியமான எடை)
23.0 – 26.9 over weight (அதிக எடை)
27.0< Obese (மிக அதிக எடை)
>30 morbid obese (ஆபத்தான எடை)

மேலும் உங்கள் உடற்பருமன் சுட்டெண் அதிகமாக இருப்பின் / மிக குறைவாக இருப்பின் உங்கள் உயரத்திற்கேற்ற ஆரோக்கியமான எடையை பின்வருமாறு கணிக்கலாம்.

இருக்க வேண்டிய எடை = BM I (23)xஉயரம்2

ஒருவருக்கு உ.ப.சு அதிகரிக்கும் போது அவருக்கு நீரிழிவு, கொலஸ்ரோல் , உயர் குருதி அமுக்கம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உ.ப.சு குறைவாக உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும் என்பதுடன் ஏற்கனவே இந்நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு , பாரிசவாதம் என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம்.எனவே உங்கள் உடல் நிறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஆரோக்கியமான வாழ்வினை பெற்றிடுங்கள் .bmi calculator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button