சூப் வகைகள்

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, காய்கறிகளை வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம்.

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்
தேவையான பொருட்கள் :

ஊற வைத்த கொள்ளு – 100 கிராம்,
பூண்டு – 2 பல்,
பட்டை, லவங்கம் – தலா ஒன்று,
வெண்ணெய் – சிறிது,
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை,
கேரட் – 1
கோஸ் – சிறிய துண்டு
உப்பு – தேவைக் கேற்ப.

செய்முறை :

* கேரட், கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கொள்ளு, பூண்டு, பட்டை, லவங்கம் நறுக்கிய காய்கள் இவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.

* வேகவைத்தவற்றை நன்றாக மசித்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

* வடிகட்டிய சூப் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், மிளகுத்தூள் சேர்த்துப் பருகவும்.

* சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப் ரெடி.201704291055046250 kollu vegetable soup horse gram vegetable soup SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button