மருத்துவ குறிப்பு

குறைந்த ரத்த அழுத்தம் மாரடைப்பைத் தடுக்கும்: ஆய்வு வெளியீடு

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லது என நம்பப்பட்டுவந்தது. அது சமீபத்தில் ஊர்ஜிதம் ஆனதைப் போல, குறைந்த ரத்த அழுத்தமும் இதயப் பிரச்சனைகளிலிருந்து தடுக்கும் என தற்போதைய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜே. மைக்கல் காஸியானோ தலைமையில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்த 50 வயதுக்கும் மேற்பட்ட, 9 ஆயிரத்து முன்னூறு பேரிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆய்வில், இது தெரியவந்துள்ளது. இதுவே இத்துறையில் நடத்தப்பட்ட நீண்ட கால ஆய்வாகும்.
உலகில் பெரும்பாலானோர், மாரடைப்புக்கு உள்ளாகும் நேரத்தில் சர்வே மூலம் கிடைத்துள்ள இந்தத் தகவல் உலகில் பலரின் உயிரை காக்க உதவும். ஐம்பது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு 120-க்கும் கீழேயும், அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு 140-150 வரை ரத்த அழுத்தம் இருக்க வேண்டும் என இதன்மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியோருக்கு அதிக ரத்த அழுத்தம் இருந்தால்தான் ரத்தம் முறையாக அவர்களின் மூளைக்கும், உடலின் மற்ற பாகங்களுக்கும் பகிர முடியும். அதனால் அது தொடர்பாக கவலை வேண்டாம் என்றும் இந்த மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.bbd84d34 1071 4a14 a417 2ecbfc91c3f4 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button