சரும பராமரிப்பு

சன்ஸ்க்ரீன் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை

கோடை காலத்தில் சருமத்தில் பாதுகாக்க பயன்படுத்தப்படும் சன்ஸ்க்ரீனை வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

சன்ஸ்க்ரீன் வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை
சன்ஸ்க்ரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை…

* நல்ல பிராண்ட் சன்ஸ்க்ரீன்களையே வாங்க வும். காலாவதி தேதி பார்க்க மறக்க வேண்டாம்.

* சன்ஸ்க்ரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் `எஸ்பிஎஃப்’ (SPF – Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இந்த எண்தான், அந்த சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலில் இருந்து சருமத்தைக் காக்கவல்லது என்பதற்கான குறியீடு. `எஸ்பிஎஃப்’ 15 உள்ள சன்ஸ்க்ரீன், வெயிலில் இருந்து ஒரு மணி நேரம் பாதுகாப்பளிக்கும். நம் ஊர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க `எஸ்பிஎஃப்’ 30 தேவைப்படும்.

* முகத்துக்கு மட்டும் அல்லாது வெயில் படும் இடங்களான கழுத்து, கை, கால் போன்ற பகுதிகளிலும் சன்ஸ்கிரீன் அப்ளை செய்ய வேண்டும்.

* சன்ஸ்க்ரீனை தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் செல்லலாம்.

* என்னதான் சன்ஸ்க்ரீன் பயன்படுத் தினாலும், வெயிலில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேல் அலைவதைத் தவிர்க்கவும். தொடர்ந்து வெயிலில் இருக்க நேரிட்டால், மூன்று மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவி மீண்டும் சன்ஸ்க்ரீன் அப்ளைசெய்து கொள்ளவும்”

201705231243123870 to watch. L styvpf

வீட்டிலேயே ஹோம்மேட் சன்ஸ்க்ரீன் பேக்குகள் செய்து பயன்படுத்த பரிந்துரைகள்…

* வறண்ட சருமம் உள்ளவர்கள் விட்டமின்கள் கொண்ட பழங்களை கூழாக்கி பேக் செய்து பயன்படுத்தலாம். பழுத்த பப்பாளிப் பழத்தை துண்டுகளாக வெட்டி, 2 ஸ்பூன் குளிர்ந்த பால் சேர்த்து, இதனோடு அரை ஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.

* ஆய்லி ஸ்கின் உள்ளவர்கள் வெயிலில் அலைந்து வீடு திரும்பியதும், தேவையான அளவு முல்தானிமட்டி பவுடரில் பன்னீர் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி முழுமையாக காயவிட்டுக் கழுவலாம்.

* நார்மல் சருமம் உள்ளவர்கள் ஒரு முழு உருளைக்கிழங்கின் சாற்றுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து வெயிலால் கறுத்துப்போன பகுதிகளில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button