மருத்துவ குறிப்பு

உன்னை அறிந்தால் நீதான் கில்லி!

நல்லா சம்பாதிக்கணும், ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கணும், எப்போதும் சந்தோஷமா இருக்கணும், யார் நம்மளப் பார்த்து ஏளனமா சிரிச்சாங்களோ அவங்க முன்னாடி கெத்தா, ஸ்டைலா, கால் மேல கால் போட்டு உக்கார்ற மாதிரி வாழணும்… இது போன்ற ஆசைகள் எல்லாம் யாருக்குத்தான் இல்லை? ஆனால் தான் நினைத்ததை அடைந்தவர்களின் எண்ணிக்கை இங்கே மிகவும் குறைவு.

அதிர்ஷ்டத்தால் எல்லோரும் உயர்ந்துவிட முடியாது. திறமை தான் முக்கியம். அதிர்ஷ்டத்தால் உயர்ந்தவர்களை விட திறமையால் உயர்ந்தவர்கள் தான் இங்கே மிக மிக அதிகம். நான் என்னுடைய துறையில் ஸ்பெஷலிஸ்ட். கடினமான உழைப்பாளி.. ஆனால் நான் ஏன் முன்னேறவில்லை என நீங்கள் உடனே கேள்வி கேட்க நினைத்தால் அதற்கான பதில் ரொம்பவே சிம்பிள். உங்களுக்கு உங்களின் திறமைக்கு ஏற்ற ஆளுமைத்திறன் இல்லை என்பது தான் பதில். எனக்கு எந்த உயர் பொறுப்பும் இல்லை, பின்னே எனக்கெப்படி ஆளுமைத்திறன் இல்லை எனச் சொல்லுவீர்கள் என கொக்கி போட நினைக்காதீர்கள். கொஞ்சம் ஷோல்டரை இறக்குங்கள். உங்களை நீங்கள் எப்படி ஆள்கிறீர்கள்? உங்களிடம் இருந்து உங்களது பெஸ்ட்டை எப்படி நீங்கள் வாங்குகிறீர்கள் என்பது தான் சுய ஆளுமைத்திறன். உங்களை பற்றி உங்களுக்கு முழுமையாக தெரிந்து, உங்களின் சுய ஆளுமைத் திறனை வளர்த்துக் கொண்டால் விரைவில் உங்களது முன்னேற்றத்தை நீங்கள் கண்கூட பார்க்க முடியும். அதற்கு இந்த ஆறு டிப்ஸ் உதவும்.
decision
1. பலம் பலவீனம் அறி : –

ஒருவருடைய பலம் எது, பலவீனம் எதுவென அவருக்கே தெரியாவிட்டால் நிச்சயம் முன்னேற முடியாது. விராட் கோலி உடனே இசையமைப்பாளராகவோ, அனிருத் உடனே இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவோ மாறிவிட முடியாது. உங்களுக்கு எந்த துறையில் பலம்.. அந்தப் பிரத்யேக வேலையில் நீங்கள் எதில் பலம், எதில் பலவீனம் என அறியவேண்டியது அவசியம். பலவீனத்தை பலமாக மாற்றுவது அவசியம் தான். ஆனால் அதை சத்தமில்லாமல் செய்யவேண்டும். பலமான துறையில் மென்மேலும் பலமானவராக மாறிக்கொண்டே, பலவீனமான துறையிலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற வேண்டும்.

என்னால் முடியாதது எதுவுமில்லை என எதிலும் பலமானவராக இல்லாமல் கால் வைத்தால் பிற்பாடு நட்டாற்றில் நிற்க வேண்டியது தான். வீரம், ஆக்ரோஷம், கோபம் இதையெல்லாம் தாண்டி விவேகம் தான் முக்கியம். நீங்கள் ஒரு சமையல்காரர் என வைத்துக்கொள்வோம். தோசையோ, பரோட்டாவோ, பிரியாணியோ எதை வேண்டுமானாலும் நீங்கள் செய்யக்கூடியவராக இருப்பீர்கள், ஆனால நீங்கள் இந்த மூன்றில் எதாவது ஒன்றிலாவது ஸ்பெஷல் மாஸ்டர் என்றால் மட்டுமே நீங்கள் கவனிக்கப்படுவீர்கள். இல்லை எனில் பத்தோடு பதினோராவது சமையல்காரராக காலத்தை கடத்தவேண்டியது தான். வாழ்க்கையும் அப்படித்தான்.

2. உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்:-

unnamed

தற்பெருமைக்கும், உங்களை நீங்களே பாராட்டிக்கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது பாஸ். போலியாக உங்களை நீங்கள் ஏமாற்றிக்கொள்வது தான் தவறு. ஆனால் ஒரு விஷயத்தை நீங்கள் உண்மையாகவே சிறப்பாகச் செய்திருந்தால் உங்களுக்கு நீங்களே பாராட்டு தெரிவித்துக்கொள்வது நல்லது. ரஜினி படத்துக்கு கடும் போட்டிகளுக்கு இடையே முதல் நாள் டிக்கெட் எடுப்பதாக இருந்தாலும் சரி, ஒரு கிலோ தக்காளியை மூன்று ரூபாய் தள்ளுபடியில் பேரம் பேசி வாங்கினாலும் சரி, சின்னச்சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு நீங்களே பாராட்டுத்தெரிவித்துக் கொள்ளுங்கள். சபாஷ்டா என்று மனதுக்குள் சொல்லிக் கொள்ளுஙகள். மிக நேர்மையாக உங்களிடம் நீங்கள் பாராட்டு வாங்கிக் கொண்டிருந்தாலே வாழக்கையில் நீங்கள் உயரத்துக்கு சென்றுகொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.

3. முக்கியமான தருணங்களில் உணர்ச்சி வசப்படாதீர்கள் :-

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்தவொரு முடிவும் தவறாகவே முடியும். எனவே எப்போதும் பதறாமல் அமைதியாக இருங்கள். நன்கு யோசித்து எந்தவொரு முடிவையும் எடுக்கவும். நீங்கள் ஒரு முடிவை எடுக்கும்போது அதன் சாதக பாதக அம்சங்களையெல்லாம் நீங்கள் மட்டும் தான் அனுபவிக்கப்போகிறீர்களா அல்லது உங்களை சார்ந்த வேறுயாராவது அனுபவிப்பார்களா என்பதையெல்லாம்
அலசி ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுங்கள். ஒரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரியாமல் நம்பாதீர்கள், முடிவெடுக்காதீர்கள். ரிஸ்க் எடுப்பது என முடிவு செய்தால் சூழ்நிலைகளை அலசி ஆராய்ந்து துணிவோடு இறங்கி அடியுங்கள்.

4. தவறை ஒப்புக்கொள்ளுங்கள் : –

எந்தவொரு விஷயத்தில் நீங்கள் தவறு செய்தாலும் சரி, அதை உணர்வதில் தயக்கம் காண்பிக்காதீர்கள். நீங்கள் எதைச் செய்தாலும் தவறு என சொல்ல ஒரு கூட்டம் இருக்கும், அவர்கள் சொல்வதை பொருட்படுத்தாதீர்கள் ஆனால் நேர்மையாக, உங்களின் மீது அக்கறை கொள்பவர்களின் விமர்சனங்களை காதில் வாங்க தவறாதீர்கள். உங்கள் மீதான விமர்சனங்களை அலசி ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது நீங்கள் தான். வாழ்வில் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் தான் செய்த தவறை உணரவில்லை எனில் இறங்குமுகம் நிச்சயம்.

5. அப்டேட் அவசியம் : –

இந்த 21 ஆம் நூற்றாண்டு அப்டேட்டுகள் காலம். நீங்கள் ஒரு அப்டேட்டை பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பது உங்கள் முடிவு. ஆனால் எந்தவொரு விஷயத்திலும் புதிதாக வந்திருக்கும் அப்டேட்டை தெரிந்து வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டாம். உங்களுக்கு கடிதம் எழுவதில் இருக்கும் சுவாரசியம் போனில் பேசும்போது கிடைக்காமல் போகலாம் ஆனால் மொபைல் என்ற ஒன்று இருப்பதையும், அதை எப்படி இயக்குவது என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியம். தனிப்பட்ட விஷயங்களில் அப்டேட்டை பின்பற்றுவதும், பின்பற்றாமல் இருப்பதும் உங்கள் உரிமை. ஆனால் வேலை என வந்துவிட்டால் அந்த வேலையில் உள்ள அப்டேட்டுகளை உடனடியாக கிரகித்து உங்களை மாற்றிக்கொண்டு செயல்படுவது மிகவும் அவசியம்.

ஆக உங்களை அறிந்தால்…நீங்கள் தான் கில்லி!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button