கை பராமரிப்பு

அக்குளில் உள்ள நீங்கா கருமையைப் போக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்…

உடலிலேயே அக்குள் பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருப்பதாலும், வியர்வை அதிகம் வெளியேறுவதாலும், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் அப்படியே தேங்கி படிந்து, ஒரு கருப்பு படலமாக உருவாகும். இது அக்குளின் அழகையே பாழாக்கி வெளிக்காட்டும்.

அக்குள் பகுதி கருப்பாக இருக்கக்கூடாதெனில், அவ்விடத்தில் சரியான பராமரிப்பை அவ்வப்போது கொடுக்க வேண்டியது அவசியம். அக்குளை வெள்ளையாக வைத்துக் கொள்ள பல இயற்கை வழிகள் உள்ளன. இங்கு அக்குளில் உள்ள கருமையைப் போக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிப்ஸ் #1 முதலில் அக்குளில் வளரும் முடியை அகற்ற வேண்டும். அக்குளில் முடி இருந்தால், அதுவே அக்குளை கருமையாக வெளிக்காட்டும். அக்குள் முடியை ஷேவிங் மூலம் நீக்குவதை விட, வேக்சிங் மூலம் அகற்றுவதே மிகவும் சிறந்த வழி.

டிப்ஸ் #2 நல்ல தரமான சரும கருமையைப் போக்கும் ஸ்க்ரப் க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். இதனாலும் அக்குள் கருமை நீங்கும். அதிலும் இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிப்ஸ் #3 தினமும் குளிக்கும் போது அக்குளை நன்கு ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். அப்படி தினமும் ஸ்கரப்பர் பயன்படுத்தும் போது, மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள். மேலும் மாய்ஸ்சுரைசரை இரவில் படுக்கும் முன்பு பயன்படுத்துவதும் மிகவும் நல்லது.

டிப்ஸ் #4 கற்றாழை ஜெல்லை தினமும் அக்குளில் தடவி ஊற வைப்பதன் மூலம், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அக்குளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, அக்குளை சுத்தமாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

டிப்ஸ் #5 உருளைக்கிழங்கில் உள்ள உட்பொருட்கள் அக்குள் கருமையைப் போக்க வல்லது. அதற்கு உருளைக்கிழங்கை வெட்டி, ஒரு துண்டை அக்குளில் தேய்த்து, 15 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதால், நல்ல பலன் கிடைக்கும்

டிப்ஸ் #6 முக்கியமாக அக்குளை இறுக்கும்படியான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இப்படி இறுக்கமான உடைகளை அணிந்தால், அது அக்குளை மேலும் கருமையாக்கும். ஆகவே சற்று தளர்வான மற்றும் சௌகரியமான உடைகளைத் தேர்ந்தெடுத்து அணியுங்கள்.

டிப்ஸ் #7 தரம் குறைவான அல்லது மிகவும் ஸ்ட்ராங்கான டியோடரண்ட்டுகளை அக்குளில் நேரடியாக பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். இந்த பொருட்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள், அக்குளை கருமையாக்கும். அக்குளில் வியர்வை துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்க, டியோடரண்ட்டுகளுக்கு பதிலாக ஒரு சிறிய துண்டு எலுமிச்சையை தினமும் அக்குளில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

beforeafter 07 1486464590

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button