மருத்துவ குறிப்பு

காதலனை பேஸ்புக்கில் ஃபிரண்டா வச்சுக்கிறது, நமக்கு நாமே வச்சுகிற ஆப்பு! ஏன் தெரியுமா?

இன்று பெரும்பாலானோர் பேஸ்புக்கில் இருக்கிறார்கள். உங்க லவ்வர் கூட உங்களுக்கு பேஸ் புக்கில் ஃப்ரண்டாக இருப்பார். அப்படி இல்லை என்றால், அவருக்கு ஃப்ரண்ட் ரெக்குவஸ்ட் அனுப்ப போறீங்களா? வேண்டாம்! லவ்வரை பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஃப்ரண்டாக வைத்துக்கொள்வது சிறந்த தீர்வாக இருக்க முடியாது. இதனால் நீங்கள் பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்க காதல் உறவில் சண்டையே தீராது.

என்னடா இது ஒரு சாதாரண ஃப்ரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்கறதுனால என்ன ஆக போகுதுனு சாதாரணமா நினைக்காதீங்க..! என்ன எல்லாம் ஆகும்னு படிச்சு தெரிஞ்சுக்கங்க…!

தேவையில்லா கவலை! நீங்கள் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ ஒரு லைக்கை போட்டு விடுவீர்கள். அல்லது நைஸ்னு ஒரு கமெண்டை தான் போடுவீர்கள்.. அதை உங்களது லவ்வர் பார்த்தால் சில மணிநேரங்களுக்கு தேவையில்லாமல் கவலையடைவார். நீங்கள் அந்த பெண்ணை இரசிக்கிறீர்கள் என நினைத்துக்கொள்வார். இதுக்கு பேர் தான் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்வது… இது உங்களுக்கு தேவையா?

அதிக கற்பனை! ஆய்வு இன்றைய காலக்கட்டத்தில் பல காதல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக தான் பிரிகிறது என்கிறது. ஏன் நீங்களே கூட உங்களது லவ்வர் சமூக வலைதளங்களில் என்ன செய்கிறார் என்பதை ஒரு கண்ணில் நோட்டமிட்டுக் கொண்டு தான் இருப்பீர்கள். உங்களுக்கே அவர் மீது ஏதேனும் சந்தேகம் வரலாம், பின் சண்டை வரலாம், அது பிரிவுக்கு கூட காரணமாகலாம் அல்லவா!

சுதந்திரம் கொடுங்கள் காதல் என்பது பறவை போல சுதந்திரமானது. ஆனால் பெரும்பாலானோர் தங்களது துணைக்கு இந்த சுதந்திரத்தை தருவதில்லை. உங்களது துணை பேஸ் புக்கில் என்ன செய்கிறார் என்பதை கண்காணிக்கிறேன் என்ற பெயரில் உங்களது உறவை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

கோபம் வேண்டாம்! உங்களது காதலி உங்களுடன் ஃப்ரண்டாக இல்லாமல், தனது அழகான புகைப்படத்தை பேஸ் புக்கில் போட்டால் அதை பார்த்து கடுப்பாக வேண்டாம். இதில் தவறு எதுவும் இல்லையே!

ஆன் லைன் ! ஆன் லைனில் இருந்து கொண்டு என்னுடன் ஏன் பேசவில்லை என்ற சண்டை வராது. நடு இரவில் எழுந்து ஆன் லைனில் இருக்கிறாரா என்று பரிசோதனை செய்யாமல், நிம்மதியாக தூங்க முடியும்.

நிம்மதியா இருக்கலாம்! ஆய்வுகளின் படி பலர் தனது துணையின் ஆன் லைன் செயல்பாடுகளை பார்த்து மன அமைதியில்லாமல் இருக்கிறீர்கள் என தெரிவிக்கிறது. நீங்கள் அவருக்கு ஃப்ரண்டாக இல்லை என்றால், அவரது செயல்பாடுகள் என்ன என்று உங்களுக்கு தெரியாது. எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

santhanam 748603 20 1500552695

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button