மருத்துவ குறிப்பு

வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி

பெண்கள் கருவுற்றிருப்பதை வீட்டிலேயே சோதித்துக் கொள்ள வந்துள்ள கருவிதான் (ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் ) வீட்டில் கர்ப்ப பரிசோதனை என்பதாகும்.

வீட்டில் கர்ப்பத்தை உறுதி செய்வது எப்படி
பெண்கள் கருவுற்றிருப்பதை வீட்டிலேயே சோதித்துக் கொள்ள வந்துள்ள கருவிதான் (ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் ) வீட்டில் கர்ப்ப பரிசோதனை
என்பதாகும். இதனை பயன்படுத்தும் முறை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம். கடையில் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட் கருவியை வாங்கும் போது அதன் எக்ஸ்பையரி டேட் எனப்படும் காலாவதி தேதியை பார்த்து வாங்கவும்.

அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சரியாக படித்துக் கொள்ளவும். கருவுற்றிருப்பதற்கான பரிசோதனை செய்ய வேண்டியவரின் சிறுநீரை ஒரு சிறிய கப்பில் பிடித்துக் கொண்டு, அதில், வீட்டில் ஹோம் பிரக்னன்ஸி டெஸ்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள பரிசோதனை ஸ்டிக்கை வைக்கவும். சில நிமிடங்கள் காத்திருக்கவும்.

ஒரு சில ஸ்டிக்குகளில் துல்லியமாக முடிவு வர 10 நிமிடங்கள் கூட காத்திருக்க வேண்டியதிருக்கும். பிறகு, 10 நிமிடம் கழித்து, சிறுநீரில் வைக்கப்பட்ட ஸ்டிக்கில் உள்ள கோடோ அல்லது பிளஸ் என்ற குறியீடோ நிறம் மங்கும் அல்லது பளிச்சென்று மாறும். நிறம் மங்கினாலோ அல்லது பளிச்சென்று மாறினாலோ கருவுற்றிருப்பதாக அர்த்தமாகும்.

தற்போது டிஜிட்டல் டெஸ்ட் கருவிகளும் வந்துவிட்டன. அவற்றை சிறுநீரில் வைத்து 10 நிமிடங்களுக்குள், பிரக்னென்ட் அல்லது நாட் பிரக்னன்ட் என்று வார்த்தையாகவே பரிசோதனை முடிவு வந்து விடுகிறது.

பொதுவாகவே இந்த டெஸ்ட்டை மாதவிலக்கு தள்ளிப் போய் ஒரு வாரம் கழித்து செய்யலாம். எந்த நேரத்திலும் செய்யலாம். ஆனால், காலையில் எழுந்ததும் செய்யும் சோதனை முற்றிலும் சரியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.201707311212423810 pregnancy test at home SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button