தலைமுடி சிகிச்சை

கூந்தல் பிரச்சனைகளைப் போக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்!

நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் கேசத்தின் சில இழைகள் உதிர்வதை உணர்கிறீர்களா? சரும நோய் நிபுணர்கள், மக்கள் ஒவ்வொரு நாளும் 50 முதல் 100 முடி இழைகளை இழப்பது சராசரியானது என்றே கூறுகின்றனர். இது சாதாரணமான ஒன்று தான். ஏனெனில் இழக்கப்பட்ட முடி இழைகளுக்கு பதிலாக அவ்விடத்தில் புதிய முடிகள் உருவாகும்.
எனினும் சில நேரங்களில் சுகாதாரமற்ற சூழலின் வெளிப்பாடுகளான அதிக வெப்பம் மற்றும் ரசாயனங்களால் முடியை இழக்க நேரிடுகிறது. இதுப்போன்ற சூழ்நிலைகளில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மூலிகை நிவாரணியாக ப்ரிங்க்ராஜ் எண்ணெய் செயல்படுகிறது.
27 1 bringraj oil
ப்ரிங்ராஜ் என்பது கரிசலாங்கண்ணி எனப்படுகின்ற மூலிகையாகும். ஆயுர்வேதம் இதனை ‘ரசாயனா’ என்று கருதுகிறது. அதாவது இது வயதாவதைத் தடுக்கும் பொருளாக செயல்படுகிறது. உண்மையில் கேச பராமரிப்பில் இது மிகவும் பயன்தரக்கூடிய மூலிகைகளில் ஒன்று. மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வதை குறைக்கும் எண்ணற்ற கேச பராமரிப்பு தயாரிப்பு பொருட்களின் மிக முக்கியமான உட்பொருள் இதுவாகும். பொதுவாக கரிசலாங்கண்ணி எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஆகியவை கலந்த கலவையாகவே உள்ளது. கரிசலாங்கண்ணி எண்ணெயின் முக்கியமான சில செயல்பாடுகள் குறித்து காண்போம்.
27 2 multani mitti for hair care
ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஆயுர்வேத கூற்றின்படி, பிட்டா எனப்படும் மூலகூறின் அதிகப்படியாக இருப்பதன் காரணமாகவே முடி உதிர்தலும் அது தொடர்பான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஆனால் கரிசலாங்கண்ணி எண்ணெய் இதனை சரி செய்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த எண்ணெயைக் கொண்டு செய்யப்படுகிற தொடர்ச்சியான மசாஜ் உச்சந்தலையில் இரத்த ஓட்டதை அதிகரிக்கிறது. இதன் காரணமாக மயிர்கால்களை வலுவாக்கி, நன்கு செயல்பட செய்து, அதன் விளைவாக முடி வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. கரிசலாங்கண்ணி எண்ணெயில் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றோடு இதர மூலிகைகளான சீகைக்காய் மற்றும் நெல்லி ஆகியவையும் கலந்தே காணப்படுகின்றன. இவை கேசத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குவதோடு அதனை பளபளப்பாக்கவும் செய்கிறது.
27 3 dandruff
பொடுகினையும் முடி நரைப்பதையும் தள்ளியே வைக்கிறது.
தொடர்ந்து வழக்கமாக கரிசலாங்கண்ணி எண்ணெயை கொண்டு செய்யப்படுகின்ற மசாஜின் காரணமாக உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படுகிறது. இதன் காரணமாக பொடுகு ஏற்படுவதில்லை. மேலும் இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடி நரைப்பதை தடுத்து கேசத்தை அதன் இயல்பான நிறத்திலேயே தக்க வைக்கிறது.
27 4 stress
மன அழுத்தத்தை குறைக்கிறது
பிட்டா எனப்படும் மூலகூற்றில் காணப்படும் ஏற்ற தாழ்வு உடலுக்கும் ,மனதிற்கும் சோர்வினை அளிப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. கரிசலாங்கண்ணி எண்ணெயின் தொடர்ந்த பயன்பாடு இதனை சரிசெய்து மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவுகிறது. மன அழுத்தத்தின் காரணமாக முடி உதிர்வு காணப்படும் மக்களுக்கு இது பெருமளவிற்கு பயன் தருகிறது. மேலும் இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்யும் போது, பதற்றம் மற்றும் தலைவலி ஆகியவற்றிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
27 5 bringraj oil
கரிசலாங்கண்ணி எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி?
இது வணிக ரீதியாக பிற எண்ணெயுடன் கலந்த கலவையாகவே கிடைக்கிறது. அதற்கு பதிலாக கரிசலாங்கண்ணி பொடியை வாங்கி நீங்கள் உபயோகப்படுத்த விரும்பும் நேரத்தில், உங்கள் விருப்பம் போல எண்ணெயை தேர்வு செய்து, அதில் சிறிதளவு கரிசலாங்கண்ணி பொடியைக் கலந்து, அதனை உச்சந்தலையில் மிதமாக மசாஜ் செய்து சில மணிநேரங்களுக்கு அப்படியே விட்டு விடலாம். பின்னர் மிதமான ஷாம்புவைக் கொண்டோ அல்லது சீகைக்காய் கொண்டோ கேசத்தை அலசலாம். கரிசலாங்கண்ணி எண்ணெய் ஒரு இயற்கையான தயாரிப்பு. எனவே எந்தவித தீங்கினையும் இது ஏற்படுத்துவதில்லை. எனினும் இதன் குளிர்ச்சியான பண்பின் காரணமாக இதனை இரவு முழுவதும் தலையில் தேய்த்து பயன்படுத்துவது பரிந்துரைக்கபடுவதில்லை. மேலும் குளிர்காலத்தில் குறிப்பாக விரைவாக ஜலதோஷம் தொற்றி கொள்ளும் மக்கள் இதனை பயன்படுத்துவதும் பரிந்துரைக்கப்படுவதில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button