உடல் பயிற்சி

மனஅழுத்தத்தை போக்கும் 4 ஆசனங்கள்

மனஅழுத்தத்தை போக்கும் 4 ஆசனங்கள்
சக்கராசனம்::நீங்கள் ஒரு மோசமான மனநிலையில் இருக்கும் போது பெரும்பாலும், உங்கள் உடல் போதுமான ஆக்சிஜன் சப்ளை செய்ய ஆழமான சுவாசத்தை எடுத்து கொள்ளவேண்டும். . இந்த நிலையில் நீங்கள் பின்னோக்கி வளைந்து, நீங்கள் உங்களை வலுவாக்கிக்கொல்ல முடியும். தரையில் சமமாக படுத்து உங்கள் முழங்காலை வளைக்க வேண்டும். உங்கள் தலையின் பின்னால் தரையில் உங்கள் உள்ளங்கைகளை வைக்க வேண்டும். இப்போது, உங்கள் கால்களை மற்றும் உள்ளங்கைகளின் மீது அழுத்தம் கொடுத்து, உங்கள் கீழ் மற்றும் மேல் உடல் தூக்கி, ஒரு அரை வட்ட சக்கரம் போல் அமைக்க வேண்டும்.2. அர்த்த சிரசாசனம்:

இந்த நிலையில் தலையின் இரத்த ஓட்டம் அதிகரித்து, மூளையில் உள்ள சுரப்பிகளை தூண்டிவிடும், அடுத்து உங்கள் வயிறு பகுதி தரையில் படும்படி படுத்துக் கொண்டு, உங்களது முழங்கைகள் தலைக்கு அருகில் வைத்து தரையை தொடும்படி வைத்துக் கொள்ளவேண்டும். மெதுவாக சுருண்டு தரையில் இருந்து உங்கள் முதுகு மற்றும் கால்களை தூக்க வேண்டும். நீங்கள் தரையில் செங்குத்தாக இருக்கும் வரை, உங்கள் முழங்கைகளில் உங்களது எடையை தாங்க வேண்டும். தேவைப்பட்டால் நீங்கள் சுவற்றை பிடித்துக் கொள்ளலாம்.

3. காக்கசனம்:

இந்த நிலை உங்களது நம்பிக்கை மற்றும் எதிர்மறை சிந்தனையை உடைக்க உதவும். ஒரு தவளை அமர்வது போல் அமர்ந்து பின்னர் தரையில் உங்கள் உள்ளங்கைகளை வைத்து, முன்னோக்கி குனிய வேன்டும். உங்களது முழங்கைகளின் மீது உங்களது முழங்கால்களை வைத்து, முழங்கைகளின் மீது அழுத்தம் தந்து உடலை உயர்த்த வேண்டும்.

4. ஹஸ்தபாதாசனா:

இந்த நிலையில் நீங்கள் உங்கள் உடல் தசையை விரிவுப்படுத்தி, ஓய்வுபெறச் செய்யலாம். உங்கள் கால்களை நன்றாக விரித்தப்படி நிற்க வேன்டும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து உங்கள் கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். பிறகு மூச்சை வெளிவிட்டபடி இடுப்பை முன்னோக்கி வளைக்க வேண்டும். தேவை என்றால், உங்கள் முழங்காலை கொஞ்சம் வளைத்து, உங்கள் உள்ளங்கையால் குதிகாலை தொடமுயற்சிக்க வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button