சரும பராமரிப்பு

உங்களுக்கு கழுத்து கருமையை போக்கணுமா? வீட்டுல பொருளிருக்கு முயன்று பாருங்கள்!

முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். சிலரது முகம் பளபளப்பாய் டாலடிக்கும். ஆனால் கழுத்தைச் சுற்றி இருக்கும் கருமை மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும். கழுத்தின் கருமையைப் போக்க வீட்டிலேயே மருந்திருக்கு என்கின்றனர் நிபுணர்கள். சங்குக் கழுத்தழகை பெற நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

எலுமிச்சையானது இயற்கை பிளீச் ஆக செயல்படுகிறது தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைக்கவும். பின்னர் குளிக்க கழுத்தின் கருமை படிப்படியாக மறையும்.

முகத்தையும்,கழுத்தையும் அழகாக பளிச் தோற்றத்துடன் மாற்றும் சக்தி பால்பவுடருக்கு உண்டு. ஒரு டீஸ்பூன் பால் பவுடர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு. அரை டீ ஸ்பூன் பாதம் எண்ணெய் கலந்து கலந்து பசை போல கலக்கவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதிகளில் அப்ளை செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம். வாரம் ஒருமுறை இதுபோல் பேக் போட முகமும், கழுத்தும் பளிச் ஆகும்.

அதேபோல் ஓட்ஸ், யோகர்டு, தக்காளி ஜூஸ் கலந்து பேக் போடவும் இது கழுத்து கருமைக்கு நல்ல பலனை தரும்.

கழுத்து கருமையை போக்குவதில் மஞ்சள்தூள் சிறந்த நிவாரணி. சிறிதளவு மஞ்சள்தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் அப்ளை செய்யவும். கழுத்துக் கருமை போகும்.

கழுத்தின் கருமையை போக்குவதில் உருளைக்கிழங்கு சிறந்த பிளீச் ஆக செயல்படுகிறது. உருளைக்கிழங்களை தோல் நீக்கி சீவி எடுத்துக்கொள்ளவும். அதை கழுத்துக் கருமை உள்ள பகுதிகளில் தேய்க்கலாம். பின்னர் அரை மணிநேரம் கழித்து குளிக்க கருமை படிப்படியாய் மறையும். அதேபோல் தக்காளியை நன்றாக மசித்து அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதிகளில் அப்ளை செய்யவும். எளிமையான இந்த வைத்தியத்தை தினசரி செய்து வர சில வாரங்களில் கழுத்துக் கருமை சரியாகும். ஆரஞ்சு சுளையை எடுத்து அதனுடன் பன்னீர் அல்லது பால் கலந்து அப்ளை செய்யவும். 15 முதல் 20 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கழுத்துப்பகுதி பளிச் என்று மாறும். இனி கழுத்து கருப்பா இருக்கேன்னு இனி கவலைப்படாதீங்க! நிபுணர்கள் கூறிய இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்க கருப்பு போயே போயிடும்.
hqdefault

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button