மருத்துவ குறிப்பு

உங்க சிறுநீரகத்தை மிக எளிமையாகவும் சீக்கிரமாகவும் சுத்தம் சூப்பர் டிப்ஸ்?

சிறுநீரகம் என்பது நமது உடலில் உள்ள ஒரு முக்கியமான உறுப்பாகும். இந்த உறுப்பிற்கு நாம் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அவ்வாறு உங்களது சிறுநீரகம் சுத்தமாக இல்லை என்றால் தேவையற்ற நச்சுக்கள் உங்களது சிறுநீரகத்தில் சேர்ந்து கொள்ளும். இதனால் உடல்வலி, சரும பிரச்சனைகள், தலைவலி ஆகியவை உண்டாகும். இந்த பகுதியில் உங்களது சிறுநீரகத்தை சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி காணலாம்.

தண்ணீர்

உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தாலே உங்களது சிறுநீரகம் சரியாக செயல்பட தொடங்கிவிடும்.

தவிர்க்க வேண்டியவை

உங்களது சிறுநீரகத்தை சுத்தம் செய்ய அதிக கவனம் தேவைப்படுகிறது என்றால், நீங்கள் புரோட்டின் குறைவான உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். சிக்கன், மீன் போன்றவற்றை உண்ணாமல் இருக்க வேண்டும்.

அதோடு, காபி, சாக்லேட் மற்றும் பிற கால்சியம் ஆக்சலேட் மற்றும் யூரிக் ஆசிட்டை உருவாக்கும் பொருட்களை சாப்பிடுவதை தடுக்க வேண்டியது அவசியம்.

குதிரைவாலி

குதிரைவாலியை நாம் நமது அன்றாட உணவு முறையில் அதிகமாக சேர்த்துக்கொள்வதில்லை. இது சிறுநீரக கல் மற்றும் சீறுநீரகத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது.

 

பழங்கள் வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகியவை சிறுநீரகத்தை சுத்தம் செய்ய உகந்த பழங்களாகும்.

மெக்னீசியம் மெக்னீசியம் சிறுநீரக கற்களை வளரவிடாமல் தடுக்கிறது. மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களின் வளர்ச்சியை தடுக்க முடியும். கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் மீல் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.10 1507632145 23 1424673215 cover

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button