சரும பராமரிப்பு

தினமும் இரவில் தேங்காய் எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்வதால் பெறும் நன்மைகள் தெரியுமா?அப்ப இத படிங்க!

அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய். இந்த தேங்காய் எண்ணெய் சமையலில் மட்டுமின்றி, சரும பராமரிப்பிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், இதைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

முக்கியமாக ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்தால் பல்வேறு சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம். இப்போது தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து காண்போம்.

நல்ல மாய்ஸ்சுரைசர்
தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ, ஒரு நல்ல மாய்ஸ்சுரைசராக இருக்கும். அதிலும் வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள், தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவ வறட்சி தடுக்கப்பட்டு, ஈரப்பசை தக்க வைக்கப்படும்.

மேக்கப் ரிமூவர்
வாட்டர் புரூஃப் மஸ்காரா மற்றும் லிப்ஸ்டிக்கை நீக்குவது என்பது கடினமான ஒன்றாக இருக்கும். ஆனால் இதை தேங்காய் எண்ணெய் எளிதாக்கும். அதற்கு இரவில் படுக்கும் முன் காட்டனில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி, உதடு, கண்கள் மற்றும் தேவையான இடங்களைத் துடைத்து எடுங்கள். இதனால் எளிதில் மேக்கப் நீங்கும்.

நேச்சுரல் ஹைலைட்டர் பெரும்பாலான ஹைலைட்டிங் பொருட்கள், அதனுள்ளே தேங்காய் எண்ணெயை கொண்டுள்ளது என்பது தெரியுமா?ஆம், இந்த எண்ணெய் சருமத்தில் மாயத்தை ஏற்படுத்தும். எனவே பொலிவான சருமம் வேண்டுமானால், அன்றாடம் தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

பருக்கள் நீங்கும் தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், முகப்பருக்களைக் கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள ஃபேட்டி அமிலங்கள் பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் மற்றும் எண்ணெய் பசை உற்பத்தியை அதிகரிக்காமல் தடுக்கும்.

சன் ஸ்க்ரீன் தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவதோடு, வெளியே செல்லும் முன் தேய்க்கும் போது வெயிலால் ஏற்படும் தாக்கத்தை தடுக்கலாம். அதிலும் 30 நிமிடத்திற்கும் மேலாக வெயிலில் சுற்றுபவராக இருப்பின், தேங்காய் எண்ணெயே மிகச்சிறந்த சன் ஸ்க்ரீன்.

ஆன்டி-ஏஜிங் தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு ஒருவர் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் கொலாஜன் உற்பத்தி மேம்பட்டு, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். மேலும் மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெய் சருமத்தினுள் ஆழமாக நுழைந்து, சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி சருமம் சுருங்குவதைத் தடுக்கும்.1coconutoil 04 1512393349

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button