தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஷாம்பு !

தலைமுடி உதிர்வதை நினைத்து வருந்துவோர் ஏராளம். ஒருவருக்கு தலைமுடி நல்ல தோற்றத்தை வழங்குவதால், அத்தகைய தலைமுடி கொத்து கொத்தாக கையில் வரும் போது, பலரும் அதற்கு தீர்வு கிடைக்காதா என்று நினைத்து வருந்துவர்.

ஒருவருக்கு தலைமுடி கொட்டுவதற்கு தற்போதைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தலைமுடிக்கு கொடுக்கும் பராமரிப்புக்களும் தான் முக்கிய காரணங்களாகும். அதோடு காலநிலை மாற்றத்தாலும் தலைமுடி உதிரும். தலைமுடி உதிரும் போது, ஆரம்பத்திலேயே சரியான பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், தலைமுடியின் ஆரோக்கியமும், அடர்த்தியும் அதிகரிக்கும்.

தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அது உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே முட்டை ஷாம்பு தயாரித்துப் பயன்படுத்துங்கள். இதனால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். சரி, இப்போது அந்த முட்டை ஷாம்பை எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

முட்டை ஷாம்பு தயாரிக்கத் தேவையான பொருட்கள்: முட்டை – 1 ஆலிவ் ஆயில் – 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன் ஷாம்பு – 2 டேபிள் ஸ்பூன்

முட்டை முட்டையில் 40 வகையான புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், அடர்த்திக்கும் தேவையான சத்துக்களாகும்.

ஆலிவ் ஆயில் இது ஒரு நேச்சுரல் ஹேர் கண்டிஷனர். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடி சேதமடைவதைத் தடுப்பதுடன், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும். மேலும் இந்த எண்ணெய் தலைமுடியை மென்மையாக்கும்.

பாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெயில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் ஏ, ஈ, கனிமச்சத்துக்கள், ஒலியிக் அமிலம் மற்றும் லினோலியிக் அமிலம் கிடைத்து, சேதமடைந்த முடிக்கு புத்துயிர் அளித்து, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் தலைமுடி உடைவதைத் தடுத்து, கடினமான மயிர்கால்களை மென்மையாக்கும். சொல்லப்போனால், இது தலைமுடிக்கு பொலிவு தரும் கண்டிஷனர் போன்று செயல்படும்.

குறிப்பு ஒருவேளை உங்கள் வீட்டில் ஆப்பிள் சீடர் வினிகர் இல்லாவிட்டால், அதற்கு மாற்றாக எலுமிச்சை சாற்றினைப் பயன்படுத்தலாம். இதுவும் ஆப்பிள் சீடர் போன்றே செயல்படும்.

ஷாம்பு எந்த வகையான ஷாம்பு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஷாம்புவில் சல்பேட் இல்லாதவாறு இருக்க வேண்டும்.

செய்முறை: * ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து, நன்கு அடித்துக் கொள்ளுங்கள். * பின் அத்துடன் ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் ஷாம்பு சேர்த்து நன்கு கலந்து கொண்டால், நேச்சுரல் முட்டை ஷாம்பு தயார்!

பயன்படுத்தும் முறை: * முதலில் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் தயாரித்து வைத்துள்ள ஷாம்புவை முடி மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 2 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, பின் மீதமுள்ளதை மேலே தடவி 3 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு தேய்த்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசுங்கள். * பின் ஏதாவது ஒரு கண்டிஷனரை ஸ்கால்ப்பில் படாமல், முடியில் மட்டும் படும்படி தடவி 2 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் அலசுங்கள்.15 1513337723 9 shampoo

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button