சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா பாதாம் எண்ணெயை இந்த 10 வழில யூஸ் பண்ணினா மின்னும் சருமம் !

ஜொலிப்பான மிருதுவான சருமம் பெறுவது என்பது முன்னாடி இருந்தே ட்ரெண்ட்டாக இருக்கிறது. ஆனால் இதற்கு பெண்கள் நிறைய காஸ்மெட்டிக் பொருட்கள், பணம் செலவு செய்தல், மாஸ்க் மற்றும் ஸ்க்ரப் என்று ஏகப்பட்ட முறைகளை அவர்கள் கையாள வேண்டியிருந்தது.

இந்த மாதிரியான கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தும் போது நாளடைவில் நமது சருமம் பாதிப்படையவும் வாய்ப்புள்ளது. எனவே தான் இயற்கை பொருளான பாதாம் எண்ணெயை கொண்டு உங்கள் சருமத்தை ஜொலிப்புடன் மிருதுவாக்குவது பற்றி தமிழ் போல்டு ஸ்கை இங்கே கூற உள்ளது.

பாதாம் எண்ணெய்யில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஏ சத்து இருப்பதால் இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் கொடுக்கிறது.

இது உங்கள் சரும துளைகளில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்குவதால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.

சரி வாங்க ஜொலிப்பான சருமம் கிடைக்க பாதாம் எண்ணெய்யை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

பாதாம் எண்ணெய் மற்றும் தேன் 1/2 டீ ஸ்பூன் தேன் மற்றும் பாதாம் எண்ணெய்யை கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி இரவு முழுவதும் விட்டு விட வேண்டும் பிறகு காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு 2-3 முறை இதை செய்து வந்தால் மிருதுவான சருமம் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் 1டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1/2 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய்யை கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு மைல்டு க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும் வாரத்திற்கு 2-3 முறை இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் 1/2 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து கொள்ளவும் இதை முகத்தில் அப்ளே செய்து இரவு முழுவதும் விட்டு விட வேண்டும் பிறகு காலையில் லேசான க்ளீன்சர் மற்றும் மிதமான சூடு குளிர் கலந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் வாரத்திற்கு 3-4 தடவை செய்து வந்தால் ஜொலிப்பான சருமம் கிடைக்கும்

பாதாம் எண்ணெய் மற்றும் பால் 1/2 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 2 டீ ஸ்பூன் பால் இவற்றை ஒரு பெளலில் கலந்து கொள்ளவும் இதை ஒரு பேஷியல் க்ளீன்சராக பயன்படுத்தி முகத்தில் தேய்க்க வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஹோம்மேடு க்ளீன்சர் பயன்படுத்தினால் ஈரப்பதம் நிறைந்த மிருதுவான சருமம் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் ப்ரவுன் சுகர் 1 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீ ஸ்பூன் ப்ரவுன் சுகர் இரண்டையும் நன்றாக கலக்கவும் இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும் பிறகு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும் இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு ஒரு முறை என பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் படிகாரம் 1 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1/3 டீ ஸ்பூன் படிகார பொடி இரண்டையும் கலந்து கொள்ளவும் இதை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் மாதத்திற்கு இரண்டு முறை இந்த மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்

பாதாம் எண்ணெய் மற்றும் எலும்பிச்சை ஜூஸ் 1/2 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு ஒரு பஞ்சில் நனைத்து இந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் இதை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் பளபளக்கும் சருமம் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் க்ரீன் டீ 1/2 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீ ஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து கொள்ளவும் இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்யவும் பிறகு லேசான க்ளீன்சர் பயன்படுத்தி முகத்தை கழுவவும் வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் மிருதுவான பொலிவான சருமம் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ்ஹிப் ஆயில் 1/2 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 2-3 சொட்டுகள் ரோஸ்ஹிப் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளவும் இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி கொள்ளவும் 5-10 நிமிடங்கள் கழித்து லேசான க்ளீன்சர் கொண்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

பாதாம் எண்ணெய் மற்றும் வெள்ளரிக்காய் வெள்ளரிக்காயை நன்றாக மசித்து 1 டீ ஸ்பூன் பாதாம் எண்ணெய்யுடன் சேர்த்து கொள்ளவும் இந்த கலவையை முகத்தில் அப்ளே செய்து 10 நிமிடங்கள் விட்டு விடவும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் வாரத்திற்கு இரண்டு முறை இந்த மாஸ்க்கை பயன்படுத்தி வந்தால் மிருதுவான பொலிவான சருமம் கிடைக்கும்.

cover1 20 1513766131

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button