உங்களுக்கு இந்த அறிகுறிகள் வைட்டமின் குறைபாட்டை தான் குறிக்கிறது என்பது தெரியுமா?படிங்க!

மனித உடல் ஒவ்வொரு சமயமும் உடலினுள் ஏதேனும் தவறாக நடந்தால் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை சரியாக கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால் உடலினுள் ஏற்படும் அபாயங்களையும், கோளாறுகளையும் தடுக்கலாம். இன்றைய காலத்தில் பலரும் ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒருவரது உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்காமல் போகிறது.

மேலும் தற்போதைய மார்டன் டயட், பலருக்கும் வைட்டமின் குறைபாட்டினை உண்டாக்குகிறது. சரி, ஒருவரது உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் என்ன நடக்கும் என தெரியுமா? வைட்டமின் குறைபாடு உள்ள உடலில் தான் நோய்கள் எளிதில் புகுந்துவிடும். இதனால் தான் இன்று ஏராளமானோர் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறார்கள். ஏனெனில் வைட்டமின்களானது உடலினுள் ஒவ்வொரு சிறிய செயல்பாட்டிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின்களின் அளவு குறைவும் போது, உடலானது நமக்கு அந்த குறைபாட்டை ஒருசில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும்.

இக்கட்டுரையில், ஒருவரது உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், நம் உடல் நமக்கு வெளிக்காட்டும் சில அறிகுறிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது வைட்டமின் குறைபாடு இருந்தால் வெளிப்படும் சில பொதுவான அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வாயின் ஓரங்களில் வெடிப்புகள்
ஒருவரது வாயின் ஓரங்களில் வெடிப்புகள் ஏற்பட்டால், அவரது உடலில் வைட்டமின் பி குறைபாடு, குறிப்பாக ரிபோஃப்ளேவின் (பி2), நியாசின் (பி3) மற்றும் வைட்டமின் பி12 போன்றவற்றில் குறைபாடுகள் உள்ளது என்று அர்த்தம். மேலும் இந்த அறிகுறி ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டையும் குறிக்கும். பொதுவாக சைவ உணவாளர்களுக்கு தான் வாயின் ஓரங்களில் வெடிப்புக்கள் ஏற்படும். சால்மன் மீன், முட்டைகள், டூனா மீன், கடற்சிப்பி மற்றும் அதிக கடல் உணவுகளை உண்ணுங்கள்.

அசைவ உணவுகளை சாப்பிடாதவர்கள், பருப்பு வகைகள், பயறுகள், வேர்க்கடலை, உலர்ந்த தக்காளி, எள்ளு விதைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், இரும்புச்சத்தை உடலால் எளிதில் உறிஞ்ச முடியும். எனவே இந்த உணவுப் பொருட்கள், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், குடைமிளகாய் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

அரிப்புக்கள் மற்றும் தலைமுடி உதிர்வது
இந்த அறிகுறிகள் ஜிங்க், வைட்டமின் பி7 மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவற்றின் குறைபாட்டைக் குறிக்கும். ஒருவருக்கு அதிகமாக தலைமுடி உதிர்ந்தால், அவர்களது உடலில் ஜிங்க் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். குறைவான அளவிலான இரும்புச்சத்து அல்லது இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், அதன் விளைவாக காயங்கள் குணமாகாது, சருமம் வறட்சியாகும், அரிப்புக்கள், சருமத்தில் சிவந்த புள்ளிகள் போன்றவை ஏற்படும்.

இத்தகையவர்கள் முட்டையை அதிகம் சாப்பிட்டால், முட்டையில் உள்ள புரோட்டீன், வைட்டமின் பி7 குறைபாட்டை தீவிரமாக்கும். எனவே உலர்ந்த பழங்கள், பூசணி விதைகள், முழு தானியங்கள், பால் பொருட்கள், அவகேடோ, பட்டர் காளான், ராஸ்ப்பெர்ரி மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

கன்னங்கள், கைகள் மற்றும் தொடைகளில் பருக்கள்
எப்போது ஒருவரது உடலில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி போன்றவற்றில் குறைபாடு இருந்தால், பருக்கள் வரக்கூடும். அதிலும் இந்த பருக்களானது சீழ் நிறைந்து இருக்கும். சில சமயங்களில் மிகுதியான வலியுடனும் இருக்கும்.

சாச்சுரேட்டட் மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளைக் குறைத்து, ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். மீன், ஆளி விதைகள், உலர்ந்த பழங்கள், பாதாம், வால்நட்ஸ் போன்றவற்றுடன், கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் குடைமிளகாய் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுங்கள்.

கைகள் மற்றும் கால்களில் அரிப்புக்கள் மற்றும் மரத்துப் போதல்
உங்களுக்கு இப்பிரச்சனைகள் அடிக்கடி ஏற்பட்டால், உங்கள் உடலில் வைட்டமின் பி குறைபாடு, குறிப்பாக வைட்டமின் பி6, வைட்டமின் பி9 மற்றும் வைட்டமின் பி12 குறைபாடுகள் உள்ளது என்று அர்த்தம். இந்த குறைபாடுகள் சருமத்தில் நரம்பு முனைகளைப் பாதிப்பதோடு, மன இறுக்கம், சோர்வு, களைப்பு, இரத்த சோகை மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.

இத்தகையவர்கள் அஸ்பாரகஸ், பசலைக்கீரை, பச்சை இலைக் காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கடல் உணவுகளை அதிகம் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.

கால் மற்றும் பாதங்களில் பிடிப்புகள் மற்றும் வலி
உடலில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் குறைவாக இருந்தால், கால்கள் மற்றும் பாதங்களில் பிடிப்புகள் மற்றும் வலியை உணரக்கூடும். நீங்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்தால், உடலில் இருந்து அதிகளவிலான கனிமச்சத்துச்சள் மற்றும் நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான பி வைட்டமின்களை அதிகம் இழக்கக்கூடும்.

நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் குறைவாக இருக்கும் போது தான், அதிகளவு வியர்க்கும். அதற்காக உடற்பயிற்சி செய்வதை நிறுத்த வேண்டாம். மாறாக வாழைப்பழம், ஹாசில்நட்ஸ், பாதாம், பூசணிக்காய், செர்ரி, ஆப்பிள், ப்ராக்கோலி, கிரேப்ஃபுரூட், முட்டைக்கோஸ், பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

இப்போது உடலில் எந்த வைட்டமின் குறைவாக இருந்தால், எம்மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பது குறித்து காண்போம்.

வைட்டமின் ஏ குறைபாடு
* களைப்பு

* இரவு நேரத்தில் மங்கலான பார்வை

* மோசமான பற்கள் மற்றும் சரும நிறம்

* ஈறுகளில் இரத்தக்கசிவு

* அடிக்கடி நோய்த்தொற்றுக்களால் அவஸ்தைப்படுவது

வைட்டமின் பி1 குறைபாடு
ஒருவரது உடலில் போதுமான வைட்டமின் பி1 இல்லாவிட்டால் கீழ்க்கட்ட அறிகுறிகள் தென்படும். அவையாவன:

* தூக்கமின்மை

* களைப்பு

* தசை பலவீனம்

* மன இறுக்கம்

* எரிச்சலுணர்வு

* எடை குறைவு

* செரிமான பாதை மற்றும் இதயத்தில் பிரச்சனை

வைட்டமின் பி2 குறைபாடு
* கண் எரிச்சல்

* எண்ணெய் பசை சருமம்

* வாய் குழியில் உள்ள ஃபிஸ்துலா

* சரும அரிப்பு

* சரும அழற்சி

வைட்டமின் பி3 குறைபாடு
* தலைவலி

* மோசமான உடல் ஆற்றல்

* வாய் துர்நாற்றம்

* மன பதற்றம்

* அல்சர்

* குடல் பிரச்சனைகள்

* பசியின்மை

வைட்டமின் பி5
* பாதங்கள் மற்றும் கால்களில் எரிச்சலுணர்வு

* பிடிப்புக்கள்

* களைப்பு

* இதய துடிப்புக்களில் ஏற்றஇறக்கம்

* வாந்தி வருவது போன்ற உணர்வு

* தூக்கமின்மை

வைட்டமின் பி6 குறைபாடு
* தூக்கமின்மை

* இரத்த சோகை

* சரும பிரச்சனைகள்

* கூந்தல் உதிர்வு

* பிடிப்புக்கள்

* நீர்க்கோர்வை

வைட்டமின் பி12 குறைபாடு
* களைப்பு

* வயிற்றுப்போக்கு

* மன இறுக்கம்

* பசியின்மை

* பதற்றம்

* பற்குழியில் அழற்சி

* ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

வைட்டமின் பி12 குறைபாடு
* களைப்பு

* வயிற்றுப்போக்கு

* மன இறுக்கம்

* பசியின்மை

* பதற்றம்

* பற்குழியில் அழற்சி

* ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

வைட்டமின் டி குறைபாடு
* பலவீனமான எலும்புகள்

* பல் சொத்தை

* சிறுநீரக கற்கள்

* பலவீனமான தசைகள்

* மோசமான கால்சியம் உறிஞ்சும் சக்தி

வைட்டமின் ஈ குறைபாடு
* இரத்த சோகை

* மன பதற்றம்

* கருவுறுவதில் பிரச்சனைகள்

* நகர்வதில் சிரமம்

Leave a Reply