உங்கள் கவனத்துக்கு கால் கட்டை விரலில் மட்டும் சுருக்கென்று வலி வருகிறதா?அப்ப இத படிங்க!

நம் உடல் மிகவும் சுவாரய்ஸ்மான விஷயங்கள் நிரம்பியவை. இவற்றில் ஒன்றால் கால்,கால் விரல்கள் இருக்கும் பகுதியில் சிறிய எலும்புகள்,ஜாயிண்ட்ஸ், திசுக்கள் என ஏராளமன விஷயங்கள் இருக்கிறது. நாம் நடப்பதற்கும், நம்முடைய முழு உடலின் எடையை தாங்குவதற்கு ஏற்பவும் அவை வடிமைக்கப்பட்டிருக்கிறது.

இவற்றில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட நம் உடல் இயக்கத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டிடும். உங்கள் பாதத்தில் ஏற்படுகிற மிகச்சிறிய வலியோ அல்லது பிரச்சனையோ உங்கள் மொத்த உடல் நிலையை பாதிக்கும் அளவிற்கு கூட ஏற்படுத்திடும். அதனை கவனமாக கையாள்வது மிகவும் அவசியமாகும்.

நம் உடலினைத் தாக்கக்கூடிய பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறி சில நம் கால்களில் தெரியும். அவை என்னென்ன என்று பார்க்கலாம். சிலருக்கு கால் கட்டைவிரலில் மட்டும் வலி இருக்கும். அவை குறித்த விரிவான தகவல்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

கட்டை விரல் :
நம் முழு உடல் எடையை தாங்கிடும் ஓர் உறுப்பு என்று அதனைச் சொல்லலாம். அதில் மிகச்சிறிய காயம் ஏற்பட்டால் கூட நாம் நடக்கும் விதத்தில் மாற்றமிருக்கும். இதில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன் தன்மையை பொருத்து பிரச்சனையின் தீவிரம் இருக்கும்.

வலி :
அது உங்கள் அன்றாட வேலையையே குலைக்கும் விதத்தில் வலி இருக்கிறதா? அல்லது தாங்கக்கூடிய வலியா என்று பாருங்கள். இது வயது வித்யாசம், பாலின பேதமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது நம் உடலில் ஏற்பட்டிருக்கும் பிற நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

காலின் வடிவமைப்பு :
கட்டை விரலுக்கும் கால் பாதத்திற்கும் இருக்கிற இடைவேளி அந்த ஜாயிண்ட்டை மெட்டடர்ஸ்பலங்கேல் ஜாயிண்ட் என்று அழைக்கப்படுகிறது. நம் முழு பாதத்தின் செயல் இதில் அடங்கியிருக்கிறது. இதனால் கட்டை விரலுக்கு அதிகமான அழுத்தம் கிடைக்கிறது. பொதுவாக அவற்றை எல்லாம் தாங்கும் தன்மையுடன் தான் இருக்கிறது. சில நேரங்களில் உங்களால் தாங்க முடியாத வலி ஏற்பட்டால் அதற்கான காரணம் என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் :
ஆர்த்ரைட்டிஸ் கால் வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வலி கட்டை விரலுக்கு மட்டுமல்ல எல்லா எலும்பு மற்றும் எலும்பு மூட்டுகளிலும் வலி ஏற்படும். ஏற்கனவே லேசாக வலி ஏற்பட்டிருந்தாலும் நாம் நடக்கும் போது ஏற்படுகிற அழுத்தம் காரணமாக அதீத வலி ஏற்படும்.

ஹாலுக்ஸ் ரிஜிடஸ் :
இதுவும் ஒரு வகை ஆர்த்தரைட்டிஸ் பிரச்சனை தான். இந்த பாதிப்பு ஏற்பட்டிருந்தால் கட்டை விரல் அதிக ஸ்டிஃபாகவும் வலி நிறைந்ததாகவும் இருக்கும். நீண்ட நேரம் நடக்கும் போதோ அல்லது நீண்ட நேரம் நின்று பணியாற்றுகிறவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

கவுட் :
இது நமக்கு பெரும் பிரச்சனையை கொடுக்கக்கூடியது. இதன் அறிகுறிகளை நாம் அவ்வளவு எளிதாக கடந்து வந்துவிட முடியாது. இதன் வலி கட்டை விரலில் மட்டுமல்ல பிற விரல்களிலும் இருக்கும். அதீத மதுப்பழக்கம் இருப்பவர்களுக்கு இது ஏற்படும். உங்கள் ரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் கலந்திருந்தால் கூட இந்த பிரச்சனை ஏற்படும். சிலருக்கு கால் பாதம் இருக்கிற பகுதி சிவப்பது, வீங்குவது போன்ற பிரச்சனையும் ஏற்படும்.

புனியன்ஸ்:
மிகவும் இருக்கமான ஷூ அணிந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இது ரத்த ஓட்டத்தை பாதிப்பதாலும் நீண்ட நேரம் அதிக அழுத்தத்தை தாங்குவதாலும் இந்த வலி ஏற்படுகிறது. சிலர் தங்க்கள் பாதங்க்களுக்கு பொருந்தாத ஷூ அணிவதாலும் இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும்.

சீசாமோய்டிட்டீஸ் :
காலில் இருக்கும் சீசமோய் எலும்புகளில் ஏற்படுகிற வீக்கம் மற்றும் பாதிப்பினால் இந்தப்பிரச்சனை உண்டாகும். அதிகமாக ஓடுவது, கட்டை விரலில் பேலன்ஸ் செய்திடும் நடன அசைவுகளை தொடர்ந்து ஆடுவது ஆகியவற்றால் இந்தப் பிரச்சனை ஏற்படக்கூடும்.

தீர்வுகள் :
இந்த கட்டை விரல் வலிக்கு தனியாக மருந்து மாத்திரை என்று எதுவும் இல்லை. உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றித்தினால் தான் தீர்வினை மேற்கொள்ள முடியும். இதற்கு தற்காலிக வலி நிவாரணிகள் மட்டுமே அளிக்கப்படுகிறது. முற்றிலுமாக போக்கவேண்டுமெனில் வாழ்க்கை முறையில் கொண்டு வரும் மாற்றமே சிறந்தது.

செய்ய வேண்டியவை :
முதலில் நீங்கள் அணியப்பயன்படுத்தும் ஷூ மற்றும் செருப்பை மாற்றிடுங்கள். நடனம் மற்றும் ஓட்டப் பயிற்சி தொடர்ந்து மேற்கொள்பவராக இருந்தால் சில நாட்களுக்கு அதனை நிறுத்திடுங்கள். வீக்கம் இருந்தால் அதனை குறைக்க மருத்துவ ஆலோசனை பெறுங்கள். காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிற வேலையை செய்ய வேண்டாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply